டேன் சேங்கர்
டேனியல் செ. சேங்கர் ஓர் நுட்ப பங்கு வர்த்தகர். தணிக்கை செய்யப்பட்ட வருமானம் 2 வருடங்களுக்குள், 10,775 அமெரிக்க வெள்ளிகள் 18,000,000 ஆக இரண்டு ஆண்டுகளில் மாறியது தணிக்கையில் தெரியவந்ததால் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார். [1] [2]
தனிப்பட்ட வரலாறு
தொகுடான் சேங்கர் பங்கு வர்த்தில் உலக சாதனை படைத்துள்ளார் [3] ஒரு வருட பங்குச் சந்தை வணிகத்தில் அவரின் மொத்த பங்குகள் 29,000% இக்கும் அதிகமாக வளர்ச்சி கண்டிருந்தன. இரண்டு ஆண்டுகளில், அவர், 10,775 வெள்ளிகளை 18 மில்லியன் வெள்ளிகளாக மாற்றினார். [4] பார்ச்சூன் இதழ், சேங்கர் பற்றி ஒரு விரிவான கட்டுரையை எழுதியது, அதில் அவரது வணிக முடிவுகளை பற்றி வரி தணிக்கை முடிவுகளை மதிப்பாய்வு செய்து எழுதியது. [5] [6] [7]
லாசு ஏஞ்சல்சின் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கு பகுதியில் சேங்கர் வளர்ந்தார். அவரது தந்தை மருத்துவர் தாய் உளவியலாளர். அவர் கல்லூரி படிப்பை முடிக்காமல் கொலராடோவிலும் இடாஹோவிலும் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டுக்காக சில ஆண்டுகள் கல்லூரியை விட்டு வெளியேறினார். தனது இருபதுகளின் ஆரம்பத்தில் தனது வருமானத்திற்காக பெல் ஹாப், கார் டிரைவர் மற்றும் சமையல்காரர் போன்ற சில வேலைகளை செய்தார்.
இறுதியில், அவர் உயர்நிலைப் பள்ளி கல்வியோ தொழில்முறை வர்த்தகமமோ இல்லாமல் எல்லேவுக்கு திரும்பினார். அவர் ஓர் வீட்டை மாற்றியமைக்கும் நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கி பின் தனது கலிபோர்னியா ஒப்பந்தக்காரரின் உரிமத்தைப் பெற்றார் . அவர் ஒரு சுயாதீன ஒப்பந்தக்காரராக பெவர்லி இல்சில் நீச்சல்குளம் அமைக்கும் வேலையில் இறங்கினார் அவ்வேலையில் ஓரளவு நல்ல வருமானத்தைப் பெற்றார். [8]
அவரது தாயார் எலைன் பங்குச் சந்தையை விரும்பினார், டான் அவருடன் தொக்காவில் வணிக ஓடைகளை அடிக்கடி பார்ப்பார். 1978 ஆம் ஆண்டில் ஒரு நாள் டான் திரையின் அடிப்பகுதியில் குறுக்கே ஓடும் செய்தியில் ஓர் பங்கு ஒரு வெள்ளிக்கு விற்பதைக் கண்டார். அவர் தனது முதல் பங்கை வாங்கி சில வாரங்களுக்குப் பிறகு $ 3 க்கு மேல் விற்றார். அந்த விற்பனையிலிருந்து, சந்தையின் போக்கில் பெரும் நாட்டம் கொண்டு ,அன்றைய பங்கு விலைகளை அறிந்து கொள்ள ஒரு கருவியை ஒப்பந்த வேலைக்கு செல்லும் போதும் அவருடன் எடுத்துச் சென்றார். [9] [10]
இணைய குமிழ்
தொகு1997 ஆம் ஆண்டில் பங்குச் சந்தையில் தொழில்நுட்பம் மற்றும் இணையப் பங்குகள் அதிக வணிகர்களின் பெற்றிருந்த போது, டான் பெரும் நகர்வுகளைக் காணத் தொடங்கினார். சந்தையில் முழுமையாக முன்னேற தேவையான மூலதனத்தை வைத்திருக்க அவர் தனது போர்ஷை சுமார் 11,000 டாலர்களுக்கு விற்றார். அடுத்த ஆண்டில், அவர் 11,000 டாலர்களை 18 மில்லியனாக பெருக்கினார், இரண்டு பத்தாண்டுகளாக சந்தையில் வணிகம் புரிந்த அறிவு பெற்ற வில்லியம் ஓ நீலின் படைப்புகளை திரும்ப திரும்ப வாசித்தார். [11] இந்த வெற்றியின் மூலம், டான் ஒரு முழுநேர வர்த்தகராகி, ஒப்பந்தத்த கார வேலையை விட்டு வெளியேற முடிந்தது. [12] [13]
சேங்கர் அறிக்கை மற்றும் சார்ட்பேட்டர்ன்.காம்
தொகு1996 ஆம் ஆண்டில் டான் தி சேங்கர் அறிக்கை என்ற தொலைநகல் செய்திமடலைத் தயாரித்தார், இது ஒவ்வொரு இரவும் பல நூறு தொடக்க வர்த்தகர்களுக்கு சென்றது. இந்த தொலைநகல் கடிதத்தை அவர் 1998 ஆம் ஆண்டில் சார்ட்பேட்டர்ன்.காம் என்ற புதிய கல்வி வலைத்தளமாக மாற்றினார், அங்கு தினசரி பங்கு விளக்கப்படங்கள் வர்த்தகர்கள் படித்து வர்த்தகம் செய்யக்கூடிய சிறந்த வடிவங்களை எடுத்துக்காட்டுகின்றன. இந்த வலைத்தளம் இப்போது உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான வர்த்தகர்களுக்கு தொழில் சந்தை தயாரிப்பாளர்கள், ஹெட்ஜ் நிதி மற்றும் தனியார் வர்த்தகர்களுக்கு சேவைகளை வழங்குகிறது. [14] [15]
குறிப்புகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2020-06-05. பார்க்கப்பட்ட நாள் 2020-09-04.
- ↑ http://archive.fortune.com/magazines/fortune/fortune_archive/2000/12/18/293117/index.htm[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Effron Audit http://chartpattern.com/articles/effron.pdf பரணிடப்பட்டது 2020-06-05 at the வந்தவழி இயந்திரம்
- ↑ [1], AIQ Systems.
- ↑ [2], Fortune Magazine, December 18, 2000.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-23. பார்க்கப்பட்ட நாள் 2020-09-04.
- ↑ http://www.traderslog.com/danzanger
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2022-07-14. பார்க்கப்பட்ட நாள் 2020-09-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2020-06-05. பார்க்கப்பட்ட நாள் 2020-09-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-11-03. பார்க்கப்பட்ட நாள் 2020-09-04.
- ↑ [3], Stock and Commodities Magazine பரணிடப்பட்டது மார்ச்சு 4, 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ https://soundcloud.com/stocktwits/dan-zanger-theyll-never-get-me-again
- ↑ http://www.sparkfin.com/how-2-amateurs-became-stock-market-millionaires/
- ↑ http://www.traderslog.com/danzanger
- ↑ http://www.newtraderu.com/2016/09/20/interview-rich-trader-dan-zanger/