டேமியன் டி ஒலிவேரா
இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்
டேமியன் டி'ஒலிவேரா (Damian Basil D'Oliveira, 19 அக்டோபர் 1960 – 29 சூன் 2014) தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் வூஸ்டர்சயர் கவுன்டி துடுப்பாட்டக் கழகத்திற்காக 1982 முதல் 1995 வரை முதல்தரப் போட்டிகளில் கலந்து கொண்டார். 9,000 இற்கும் அதிகமான முதல்-தர ஓட்டங்களை இவர் பெற்றுள்ளார். ஒரு இன்னிங்சில் அதிகூடியதாக 237 ஓட்டங்கள் எடுத்தார்.[1][2]
இவரது தந்தை பசில், இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார். இவரது மாமா ஐவன், இவரது மகன் பிரெட் ஆகியோரும் முதல்தர துடுப்பாட்ட வீரர்கள் ஆவர்.
மறைவு
தொகுஇரண்டரை ஆண்டுகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட டேமியன் 2014 சூன் 29 இல் இறந்தார்.[1] இவருக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Former Worcestershire batsman dies". பிபிசி. 29 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2014.
- ↑ 2.0 2.1 "Worcestershire announce academy director Damian D'Oliveira has died". தி கார்டியன். 29 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2014.