டேவிட் ஜி கோரி
டேவிட் ஜி கோரி (David G. Cory) என்பவர் கனடாவிலுள்ள வாட்டர் லூ பல்கலைக்கழகத்தில்[1] வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவர் அதே பல்கலைக்கழகத்தின் குவாண்டம் தகவல் செய்முறை[2] தொடர்பான கனடா சிறப்பு ஆராய்ச்சி அமர்வில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் வாட்டர் லூ நானோ தொழில் நுட்ப நிறுவனத்துடன் தொடர்புடைய குவாண்டம் கணக்கீட்டு நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். கேசு வெசுட்டன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற இவர் 1981 ஆம் ஆண்டு இளநிலைப் பட்டமும் 1987 ஆம் ஆண்டு வேதியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.[1][3][4] இவர் 2010 ஆம் ஆண்டு வாட்டர் லூ பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதற்கு முன் மாசாசூயெட்சு தொழில்நுட்ப நிறுவனத்தில் அணுக்கரு பொறியியல் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்குதான் அணுக்கரு காந்த ஒத்ததிர்வு தொடர்பான குவாண்டம் கணக்கீட்டில் தனது பங்களிப்பை வழங்கினார்.[5][6][7] அமர் பாக்மி மற்றும் திமோதி ஏவல் ஆகியோருடன் சேர்ந்து இவர் போலி-தூய்மையான நிலைகள் என்ற கருத்தை உருவாக்கினார் மற்றும் அணுக்கரு காந்த ஒத்ததிர்வு குவாண்டம் கணக்கீட்டின் முதல் சோதனை விளக்கங்களை நிகழ்த்தினார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Faculty profile பரணிடப்பட்டது 2021-09-13 at the வந்தவழி இயந்திரம், University of Waterloo, retrieved 2014-07-16.
- ↑ David Cory, Canada Excellence Research Chairs, Government of Canada, accessed 2014-07-16.
- ↑ "Alum Updates" (PDF), The Case Chemist, 104: 7, Winter 2010–2011.
- ↑ Worldcat entry for Cory's dissertation, "Applications of cross polarization spin dynamics in solids", retrieved 2014-07-16.
- ↑ Lloyd, Seth (2006), Programming the Universe: A Quantum Computer Scientist Takes on the Cosmos, Knopf Doubleday Publishing Group, pp. 151–152, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780307264718.
- ↑ "Quantum computer in a cup of joe?", Science News, 17 January 1997.
- ↑ "Quantum dreams", The Economist, March 8, 2001.
- ↑ "MIT researchers create quantum computer that simulates quantum system", MIT News, June 25, 1999
வெளி இணைப்புகள்
தொகு- டேவிட் ஜி கோரி publications indexed by Google Scholar