டைகுளோரோபிசு(எத்திலீன்டையமீன்)நிக்கல்(II)
டைகுளோரோபிசு(எத்திலீன்டையமீன்)நிக்கல்(II) (Dichlorobis(ethylenediamine)nickel(II)) என்பது NiCl2(en)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அணைவுச் சேர்மமாகும். இங்கு en = எத்திலீன்டையமீனைக் குறிக்கிறது. நீல நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் தண்ணீரிலும் முனைவுக் கரிமக் கரைப்பான்களிலும் கரைகிறது. அணைவுப்பகுதி மின்சுமையற்று நடுநிலையுடன் காணப்படுகிறது. டைகுளோரோபிசு(எத்திலீன்டையமீன்)நிக்கல்(II) நீரிலி நிலையிலும் ஒற்றை நீரேற்றாகவும் இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது. நிக்கல் குளோரைடு கரைசலுடன் எத்திலீன்டையமீன் கரைசலுடன் சேர்த்து சூடுபடுத்தி இதைத் தயாரிக்கலாம். [Ni(en)3]Cl2•2H2O மற்றும் நீரேறிய நிக்கல் குளோரைடு ஆகியவற்றிலிருந்து ஈந்தணைவிகளை மறுபகிர்வு செய்வதனால் படிகவடிவ சேர்மத்தைத் தயாரிக்கிறார்கள்:[1]
இனங்காட்டிகள் | |
---|---|
22980-82-1 | |
பண்புகள் | |
C4H16Cl2N4Ni | |
வாய்ப்பாட்டு எடை | 249.79 g·mol−1 |
உருகுநிலை | > 290 °C (554 °F; 563 K) (சிதைவடையும்) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- 2 [Ni(en)3]Cl2 + NiCl2 → 3 NiCl2(en)2.
விரைவான ஈந்தணைவி மறுபகிர்வு என்பது எண்முக நிக்கல்(II) அணைவுகளின் இயக்கவியல் தன்மைக்கு அடையாளமாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ State, Harold M. (1960). "Bis(Ethylenediamine)Nickel(II) Chloride"". Inorganic Syntheses 6: 198–199. doi:10.1002/9780470132371.ch63.