டைசயனமைடு

வேதியியல் சேர்மம்

டைசயனமைடு (Dicyanamide) C2N3 என்ற வேதி வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு அயனி ஆகும். இருசயனமைடு, இருசயனமைன் என்ற பெயர்களாலும் இவ்வேதிச் சேர்மம் அழைக்கப்படுகிறது. இவ்வயனியில், இரண்டு சயனைடு குழுக்கள் மையத்திலுள்ள நைட்ரசன் எதிர்மின் அயனியுடன் பிணைக்கப்பட்டுள்ளன. 2-சயனோகுவானிடின் சேர்மம் சிதைவடைந்து இருசயனமைடு உருவாகிறது. கரிம மற்றும் கனிம உப்புகளில் இவ்வயனி ஓர் இணையெதிர் அயனியாக விரிவாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பல்வேறு கரிமச் சகப்பிணைப்புச் சேர்மங்களை தொகுப்பு முறையில் தயாரிக்க உதவும் வினைபடு பொருளாகவும் பயன்படுகிறது.

இருசயனமைடின் கட்டமைப்பு

கரிம மீக்கடத்திகளில் எதிரயனிக் கூறாக டைசயனமைடு பயன்படுத்தப்பட்டது. 1990 களில், அமைப்பு நிலையில் உயர் நிலைமாறு வெப்பநிலை கொண்ட மீக்கடத்தியாக இவ்வயனி கருதப்பட்டது [1]. பெப்டைடுகளை [2] உற்பத்தி செய்யும் வினைகளில் இச்சேர்மத்தின் பங்களிப்பு எவ்வாறு உள்ளதென தீன் கென்யோன் சோதித்துப் பார்த்தார். இவ்வினைகளின் தன்மையைக் கருத்திற்கொண்டு, மேலும் சோதனையைத் தொடர்ந்த இவருடைய இணை பணியாளர், இருசயனமைடு ஒர் உயிர்வழிப் பிறப்பு முன்னோடியாக இருக்கும் சாத்தியங்கள் உள்ளதாக தெரிவித்தார் [3]

மேற்கோள்கள் தொகு

  1. Kini, Aravinda M.; Geiser, Urs; Wang, Hau H.; Carlson, K. Douglas; Williams, Jack M.; Kwok, W. K.; Vandervoort, K. G.; Thompson, James E. et al. (1990). "A new ambient-pressure organic superconductor, κ-(ET)2Cu[N(CN)2]Br, with the highest transition temperature yet observed (inductive onset Tc= 11.6 K, resistive onset = 12.5 K)". Inorganic Chemistry 29: 2555–2557. doi:10.1021/ic00339a004. 
  2. Steinman, G.; Dean H. Kenyon; Calvin, M. (1966). "The mechanism and protobiochemical relevance of dicyanamide-medicated peptide synthesis". Biochim Biophys Acta 124 (2): 339–350. doi:10.1016/0304-4165(66)90197-8. பப்மெட்:5968904. 
  3. Steinman, G.; Cole, M. N. (1967). "Synthesis of biologically pertinent peptides under possible primordial conditions". Proc Natl Acad Sci U S A. 58 (2): 735–742. doi:10.1073/pnas.58.2.735. பப்மெட்:5233470. 

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைசயனமைடு&oldid=2123566" இலிருந்து மீள்விக்கப்பட்டது