2-சயனோகுவானிடின்

வேதிச் சேர்மம்

2-சயனோகுவானிடின் (2-Cyanoguanidine) என்பது C2H4N4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். குவானிடின் சேர்மத்திலிருந்து வழிப்பொருளாக வருவிக்கப்படும் நைட்ரைல் சேர்மம் இதுவாகும். சயனமைடினுடைய இருபடிச் சேர்மமாகவும் இது கருதப்படுகிறது. சயனமைடில் இருந்தே 2-சயனோகுவானிடின் தயாரிக்கப்படுகிறது. இதுவொரு நிறமற்ற திண்மமாகும். தண்ணீர், அசிட்டோன், ஆல்ககால் போன்ற முனைவுக் கரைப்பான்களில் 2-சயனோகுவானிடின் கரைகிறது. பென்சீன், எக்சேன் போன்ற முனைவற்ற கரிமக் கரைப்பான்களில் இது கரைவதில்லை[1].

2-சயனோகுவானிடின்
Skeletal formulaπ
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2- சயனோகுவானிடின்
வேறு பெயர்கள்
சயனோகுவானிடின், டைசயனோடையமைடு, என்-சயனோகுவானிடின், 1-சயனோகுவானிடின், குவானிடின்-1-கார்போநைட்ரைல், டைசயன்டையமீன், டைடின், டி.சி.டி, டை.சை
இனங்காட்டிகள்
461-58-5 Y
ChemSpider 9611 Y
EC number 207-312-8
InChI
  • InChI=1S/C2H4N4/c3-1-6-2(4)5/h(H4,4,5,6) Y
    Key: QGBSISYHAICWAH-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2H4N4/c3-1-6-2(4)5/h(H4,4,5,6)
    Key: QGBSISYHAICWAH-UHFFFAOYAY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10005
வே.ந.வி.ப எண் ME9950000
  • N#C\N=C(/N)N
பண்புகள்
C2H4N4
வாய்ப்பாட்டு எடை 84.08 கி/மோல்
தோற்றம் வெண் படிகங்கள்
அடர்த்தி 1.400 கி/செ.மீ3
உருகுநிலை 209.5 °C (409.1 °F; 482.6 K)
கொதிநிலை 252 °C (486 °F; 525 K)
41.3 கி/லி
மட. P -0.52
2.25•10−10 வளிமண்டல .மீட்டர்3/மோல்
-44.55•10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீங்கானது (Xn)
R-சொற்றொடர்கள் R20/21/22
S-சொற்றொடர்கள் S24/25
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பும் பயனும்

தொகு

சயனமைடுடன் ஒரு காரத்தைச் சேர்த்து சூடுபடுத்தி 2-சயனோகுவானிடினைத் தயாரிக்கிறார்கள். சயனமைடு சேர்மம் சிதைக்கப்படுவதால் மண்ணில் இது உருவாகிறது. 2-சயனோகுவானிடின், குவானிடின்கள், மெலாமைன்கள் போன்ற சேர்மங்களிலிருந்து பல்வேறு வகையான பயனுள்ள பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக, அசிட்டோகுவானமைன், பென்சோகுவானமைன் போன்ற கரிமச் சேர்மங்கள் சயனோகுவானிடினுடன் நைட்ரைலைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதால் தயாரிக்கப்படுகிறது:[2][3]

(H2N)2C=NCN + RCN → (CNH2)2(CR)N3.

சயனோகுவானிடினை மெது உரமாகவும் பயன்படுத்துகிறார்கள். முன்னதாக இது சில வெடிபொருட்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. பிசின் தொழிற்சாலைகளில் ஈப்பாக்சி பிசின்களை நீராற்றும் முகவராகவும் பயன்படுத்துகிறார்கள்[1]

வேதியியல்

தொகு

2-சயனோகுவானிடின் இரண்டு வகையான வடிவ மாற்றியங்களைக் கொண்டுள்ளது. இவை புரோட்டானேற்றத்திலும் நைட்ரைல் குழு இணைந்துள்ள நைட்ரசன் அணுவுடன் ஏற்பட்டுள்ள பிணைப்பிலும் வேறுபடுகின்றன.

 

நைட்ரசன்களின் முறை சார்ந்த அமில கார வினை வழியாக உருவாகி இருமுனை அயனியாகவும் 2-சயனோகுவானிடின் காணப்படுகிறது.

 

இருமுனை அயனி வடிவிலிருந்து அமோனியா (NH3) நீக்கமும் தொடர்ந்து எஞ்சியுள்ள மைய நைட்ரசன் அணுவின் புரோட்டான் நீக்கத்தாலும் டைசயனமைடு [N(CN)2] எதிர்மின் அயனி உருவாகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Thomas Güuthner (2006). "Cyanamides". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. DOI:10.1002/14356007.a08_139.pub2. 
  2. "Amino Resins". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2012). Wiley-VCH. DOI:10.1002/14356007.a02_115.pub2. 
  3. J. K. Simons, M. R. Saxton (1953). "Benzoguanamine". Organic Syntheses 33: 13. doi:10.15227/orgsyn.033.0013. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-சயனோகுவானிடின்&oldid=3291594" இலிருந்து மீள்விக்கப்பட்டது