எக்சேன்
எக்ஃசேன் (ஹெக்சேன்) என்னும் கரிம வேதியியல் பொருள் ஆல்க்கேன் வகையைச் சேர்ந்த ஒரு ஐதரோகார்பன் (கரிமநீரதை) ஆகும். இம்மூலக்கூறில் 6 கரிம அணுக்களும், 14 ஐதரசன் அணுக்களும் உள்ளன. கரிம அணுக்கள் நேர்தொடராக அமைதுள்ளன. கரிம அணுக்களுக்கிடையே ஒற்றைப் பிணைப்புதான் உள்ளது. இப்பொருள் அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ளது. இந்நீர்மம் 69 °C (342 K) ல் கொதிநிலைக்கு வருகின்றது. நிலத்தடியில் இருந்து எடுக்கும் கச்சா எரியெண்ணெயை தூய்மைப்படுத்துகையில், எக்ஃசேன் விளைபொருளாக கிடக்கின்றது.[1][2][3]
நச்சுத்தன்மை
தொகுஎக்ஃசேன் அதிக நச்சுத்தன்மை கொண்டதல்ல, எனினும், இதனை முகர்ந்தால் மென்மையான மயக்கம் உண்டாக்கும். அதிக அளவில் முகர்ந்தால், தலைசுற்றல் போன்ற உணர்வு, தலைவலி, மயக்கம் போன்ற தூக்கம் ஏற்படும். தொடர்ந்து முகர நேரிட்டால், உடல் தசைகள், தலையில் உள்ள தசைகள் ஆகியவை அழியத்தொடங்கும். கை கால்களை துல்லியமாய் இயக்க முடியாமையும், கண்பார்வையில் குறைபாடுகளும் ஏற்படும் என அறியப்படுகின்றது. காலணிகள், தானுந்துகள், வீட்டு மேசை நாற்காலி போன்ற இருக்கைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் இடங்களில் பணியாளர்களுக்கு எக்ஃசேன் முகரும் வாய்ப்பு உண்டு, அப்படி முகர்வதால் கேடுகள் நிகழலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "n-hexane – Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 16 September 2004. Identification and Related Records. Archived from the original on 8 March 2012. பார்க்கப்பட்ட நாள் 31 December 2011.
- ↑ Hofmann, August Wilhelm Von (1 January 1867). "I. On the action of trichloride of phosphorus on the salts of the aromatic monamines". Proceedings of the Royal Society of London 15: 54–62. doi:10.1098/rspl.1866.0018.
- ↑ William M. Haynes (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). Boca Raton: CRC Press. pp. 3–298. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4987-5429-3.
ஆல்க்கேன்கள் | |||||||||||||||||||||||||||||||
மெத்தேன் |
| |
எத்தேன் |
| |
புரொப்பேன் |
| |
பியூட்டேன் |
| |
பென்ட்டேன் |
| |
எக்சேன் |
|||||||||||||||||||||
எப்டேன் |
| |
ஆக்டேன் |
| |
நோனேன் |
| |
டெக்கேன் |
| |
ஆண்டெக்கேன் |
| |
டோடெக்கேன் |
|