மேசை
மேசை என்பது உயரமான தட்டையான மேற்புறத்துடன் கூடிய தளபாடம் ஆகும். பரவலாக 1 முதல் 4 கால்கள் கொண்டிருக்கும். (சிலவற்றில் இன்னும் அதிகமாக இருக்கலாம்). இது வேலை செய்வதற்கும், சாப்பிடுவதற்கும் அல்லது பொருட்களை வைப்பதற்குமான ஒரு மேற்பரப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. [1] உணவு மேசைகள் பரவலாகப் பயன்படுத்தப்படும் மேசைகளாகும். இவை உணவு உண்பதற்காகவும் தேநீர் பரிமாருவதற்காகவும் பயன்படுகிறது.[2]
சொற்பிறப்பியல்
தொகுமேசை என்ற சொல் பண்டைய ஆங்கில வார்த்தையான tabele என்பதிலிருந்து பெறப்பட்டது. இது tabula என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது . இது ஒரு பலகை, தட்டையான மேல் துண்டு' என்று பொருள்படும். இது bord எனும் ஆங்கில வார்த்தைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டது [3] இது பிரான்சிய மொழியின் table எனும் வார்த்தையின் தாக்கத்தில் உருவானது.
வரலாறு
தொகுபண்டைய எகிப்தியர்களால் [4] கிமு 2500 இல் மரம் மற்றும் அலபாஸ்டர் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டதே துவக்கக் கால மேசைப் பயன்பாடாகக் கருதப்படுகிறது.[5] மர மேசைகளின் சில பயன்பாடுகள் கல்லறைகளில் காணப்பட்டாலும், அவை பெரும்பாலும் தரையில் இருந்து பொருட்களை வைக்கப் பயன்படுத்தப்படும் கல் மேடைகளை விட சற்று உயரமானதாகவே இருந்தன. உணவு மற்றும் பானங்கள் சாப்பிடுவதற்காக ஒரு பீடத்தின் மீது பெரிய தட்டுகளில் வைக்கப்படுகின்றன. எகிப்தியர்கள் பல்வேறு சிறிய மேசைகள் மற்றும் உயரமான விளையாட்டுப் பலகைகளைப் பயன்படுத்தினர். மெசசொப்பொத்தேமியாவில் பல்வேறு உலோகங்கள் பயன்படுத்தப்பட்டதைப் போலவே, சீனர்கள் எழுத்து மற்றும் ஓவியக் கலைகளுக்காக மிக ஆரம்ப நிலை மேசைகளை உருவாக்கினர். [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Table". Merriam-Webster. Archived from the original on 2012-05-08. பார்க்கப்பட்ட நாள் 2012-05-18.
- ↑ "table, n."..
- ↑ "Etymonline". Archived from the original on 2022-10-20. பார்க்கப்பட்ட நாள் 2006-03-07.
- ↑ 4.0 4.1 "Ancient Egyptian Furniture: History & Design". Archived from the original on 2020-06-20. பார்க்கப்பட்ட நாள் 2020-04-30.
- ↑ Extraordinary Origins of Everyday Things. Reader's Digest. 27 November 2009. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0276445699.
வெளி இணைப்புகள்
தொகு- மேசையின் வரலாறு
- Antike Tisch-Kultur.de (ஜெர்மன்) - பண்டைய மேசைகளின் காட்சியகங்கள்