டைசர்
டைசர் (Dicer) விலங்கு மற்றும் தாவர (பயிர்) உயிரினத்தில் வரும் ஒரு உள்-ஆர்.என்.எ அழிவு (endoribonuclease) நொதியகும். இவைகள் ஆர்.என்.எ. சு III(RNAse III) என்னும் குடும்பத்தில் வருபவை ஆகும். டைசர்களின் சிறப்பு என்னவெனில், இவைகள் ஈரிழை ஆர்.என்.எ களையும் (dsRNA), முந்திய குறு ஆர்.என்.எ வையும் (pre-miRNA) 21-23 துகள்களாக (nucleotides) வெட்டி களைவது ஆகும். மேலும் இவைகள் வெட்டும் போது இரு துகள்களை 3' முனையில் நீட்டி அவைகளை தனியாக தொங்க விடுவது (overhangs) இதனின் தனி சிறப்பு. இதன் புரத அமைப்பில் ஆர்.என்.எ. சு III (RNAseIII) என்கிற முனையமும் (domain) PAZ என்கிற முனையங்களை கொண்டுள்ளது. இவ்விரு முனையங்கள் தான் சிறு ஆர்.என்.எ (siRNA) அளவுகளை உறுதிபடுத்துகின்றன. டைசர், ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RNA induced silencing complex (RISC) ஆக்கம் பெறுவதற்கு முதல் கரணி ஆகும். பின் இக்கலவை அர்கோனட் (argonaute) புரதங்களோடு இணைத்து, சிறு ஆர்.என்.எ மற்றும் குறு ஆர்.என்.ஏ வையும் அதற்கான இலக்கு செய்தி ஆர்.என்.எ (mRNA)களோடு பிணைந்து அழிகின்றன அல்லது புரத உற்பத்தியெய் தடுக்கின்றன.
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ Macrae I, Zhou K, Li F, Repic A, Brooks A, Cande W, Adams P, Doudna J (2006). "Structural basis for double-stranded RNA processing by Dicer". Science 311 (5758): 195–8. doi:10.1126/science.1121638. பப்மெட்:16410517.