டைடல் பூங்கா, சென்னை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப வளாகம்
(டைடெல் பூங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டைடல் பூங்கா (Tidel Park) சென்னையின் தரமணி பகுதியில் அமைந்த தகவல் தொழில்நுட்பக் கட்டிடம் ஆகும். ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ள இக்கட்டிடம் 2000இல் திறக்கப்பட்டது. டைடல் பார்க், ஆசியாவில் உள்ள மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்களில் ஒன்றாகும். இக்கட்டிடம், 119,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது, சென்னை விமான நிலையதிலிருந்து 14 கிமீ தொலைவிலும், சென்னைத் துறைமுகத்திலிருந்து 16 கிமீ தூரத்திலும் உள்ளது.
டைடல் பூங்கா | |
---|---|
தகவல் தொழில் நுட்ப பூங்கா | |
டைடல் பூங்கா ஆசியாவின் மிகப்பெரிய த.தொ பூங்கா | |
பொதுவான தகவல்கள் | |
வகை | தகவல் தொழினுட்ப பூங்கா |
இடம் | திருவான்மியூர், சென்னை, இந்தியா |
முகவரி | 4, ராசீவ் காந்தி சாலை, தரமணி, சென்னை, தமிழ்நாடு 600 113, இந்தியா |
ஆள்கூற்று | 12°59′23″N 80°14′55″E / 12.9897°N 80.2486°E |
கட்டுமான ஆரம்பம் | 1999 |
நிறைவுற்றது | 2000 |
துவக்கம் | 4 சூலை 2000 |
செலவு | ₹ 3,380 மில்லியன் |
உரிமையாளர் | TIDEL Park Ltd. |
உயரம் | |
கூரை | 51.68 m (169.6 அடி)[1] |
மேல் தளம் | 12 |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 13 |
தளப்பரப்பு | 1,280,000 sq ft (119,000 m2) |
உயர்த்திகள் | 19[1] |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | சி. என். இராகவேந்திரன் (CRN Architects) |
மேம்பாட்டாளர் | TIDCO and ELCOT |
முதன்மை ஒப்பந்தகாரர் | Hyundai Engineering Company |
மேற்கோள்கள் | |
[2] |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Tidel Park". Emporis.com. பார்க்கப்பட்ட நாள் 18 Dec 2011.
- ↑ டைடல் பூங்கா, சென்னை at Emporis