டைட்டானிக் (1943 திரைப்படம்)

டைட்டானிக் (Titanic) என்பது 1943 ஆண்டைய ஜேர்மன் பிரச்சாரப் படம் ஆகும், இது 1912 இல் டைட்டானிக் கப்பல் மூழ்கியதை அடிப்படையாக கொண்டு  எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். இது இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தின்போது, டாப்ஸ் புரொடக்சன்ஸ் யுஎஃப்ஏ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படமாகும்.  பிரித்தானிய நிறுவனத்தால் ஏற்கனவே 1929 ஆம் ஆண்டில் இந்த கப்பல் நேர்ச்சி பற்றிய ஒரு ஜெர்மன் மொழி திரைப்படம் தயாரித்து வெளியிட்டிருந்தது. இருந்தாலும், இந்த திரைப்படத்தை நாஜி பரப்புரை அமைச்சரான ஜோசப் கோயபல்சால் ஜெர்மானிய திரைப்படத் துறை மற்ற எந்த நாட்டின் திரைத் துறைக்கும் குறைந்ததில்லை என்பதை நிறுவ வேண்டும். என்பது மட்டுமல்லாமல், இட்லரின் கொள்கை பிரச்சாரப் படமாகவும் எடுக்கப்பட்டது. படமானது  பிரித்தானிய. அமெரிக்கப் பெரு முதலாளித்துவமே இந்தப் பேரழிவிற்கு காரணம் என்று குற்றம்சாட்டும் நோக்குடன் எடுக்கப்பட்டது. கப்பல் குழுவினரில் முற்றிலும் கற்பனை வீரரான ஒரு ஜேர்மனிய அதிகாரி இருப்பதாக சித்தரிக்கப்பட்டார். இவர் பிரித்தானிய அதிகாரிகளை விட சிறந்தவராக காட்டப்பட்டார். இது பிற இனத்தவருடன் ஒப்பிடுகையில் ஜேர்மனியர்கள் உயர்ந்தவர்களாகவும் துணிச்சலானவர்களாகவும், தன்னலமற்றவர்களாகவும் காட்டும் நோக்கம் கொண்டதாக இருந்தது.

டைட்டானிக்
Titanic
இயக்கம்ஹெர்பர்ட் செல்பின்
வெர்னர் கிலிங்கர் (பெயர் இடம்பெறவில்லை)
தயாரிப்புவில்லி ரிபெர்
கதைவால்டர் ஸெர்லெட் ஆல்ஃபெனிஸ்
ஹெர்பர்ட் செல்பின்
ஹரால்ட் ப்ராட் (பெயர் இடம்பெறவில்லை)
ஹான்சி கோக் (பெயர் இடம்பெறவில்லை)
நடிப்புசைபில் ஸ்கிமிட்ஸ்
ஹன்ஸ் நீல்சன்
கலையகம்டோபிஸ் பிலிம்ஸ் கன்ஸ்ட்
விநியோகம்UFA
IHF (USA, Video)
Kino Video (DVD, USA)
வெளியீடுநவம்பர் 10, 1943 (1943-11-10)
ஓட்டம்85 நிமிடங்கள்
நாடுஜெர்மனி
மொழிஜெர்மன் மொழி
ஆக்கச்செலவு4,000,000 Reichsmark

திரைப்படத்தின் அசல் இயக்குனரான ஹெர்பர்ட் செல்பின் நாஜி ஆட்சிக்கு எதிராக பேசியதாக பின்னர் கைது செய்யப்பட்டு - பின்னர் சிறையில் தூக்கிலிடப்பட்டார் - படத்தின் எஞ்சிய காட்சிகளை வெர்னர் கிலிங்கர் இயக்கி நிறைவு செய்தார். ஆனால், அவரது பெயர் படத்தில் இடம்பெறவில்லை.[1]

நிறைவடைந்த படம் கோயபெல்ஸுக்குத் திருப்தி அளிக்கவில்லை. நாஜி ஆக்கிரமித்திருந்த பிற தேசங்களில் மட்டும் 1843 நவம்பரில் டைட்டானிக் திரையிடப்பட்டது. நாஜிக் கொள்கைளைப் பரப்பும் நோக்கில் உருவாக்கப்பட்ட திரைப்படம், அதற்கு நேர்மாறான விளைவுகளை உண்டாக்கலாம் என கோயபெல்ஸ் அஞ்சியதால் ஜெர்மனியில் திரையிடப்படவில்லை. பிறகு படத்தை பிறகு கோயபால்ஸ் முழுமையாக படத்தை தடை செய்தார்.

இப்படமானது டைட்டானிக் கப்பலின் நிகழ்வுகளைக் கொண்டு டைடானிக் என்ற பெயரிடப்பட்டு எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் ஆகும். மேலும் படத்தில் கப்பல் மூழ்கிய சம்பவத்தில் வரலாற்று நபர்களுடன் பல்வேறு கற்பனைக் கதாபாத்திரங்கள் போன்றவற்றைக் கொண்டும் எடுக்கப்பட்டது இப்படம் டைடானிக் படங்களுக்கு முதல் தொடக்கமாக அமைந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. ராம் முரளி (22 சூன் 2018). "மூழ்காத உண்மைகள்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2018.