டைம் ஆப் லவ் (திரைப்படம்)

நோபட் இ அசிகி/டைம் ஆப் லவ் (பாரசீக மொழி: نوبت عاشقي‎ ஆங்கிலம்:Time of Love) என்ற திரைப்படம் 1990 ல் வெளிவந்தது. ஈரானிய இயக்குனர் மோசன் மக்மால்பஃப் அவர்கள் இயக்கிய திரைப்படம் இது. இத்திரைப்படத்திற்கான கதை மோசன் மக்மால்பஃப் எழுதியது. இத்திரைப்படம் மூன்று பகுதிகளைக் கொண்டது. மூன்று பகுதிகளும் கிட்டத்தட்ட ஒரே கதையமைப்பை ஒத்தது. இந்த‌ ஈரானியத் திரைப்படம் துருக்கி மற்றும் இஸ்தான்புல் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் வசனங்கள் துருக்கிய மற்றும் பாரசீக மொழியில் இருக்கும். இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[1]

நோபட் இ அசிகி/ டைம் ஆப் லவ்
இயக்கம்மோசன் மக்மால்பஃப்
தயாரிப்புஅப்பாஸ் ராண்ட்ஜ்பார்
கதைமோசன் மக்மால்பஃப்
நடிப்புஷிவா கிரீட் (Shiva Gered), அப்துர் ரஹ்மான் பாலே (Abdurrahman Palay), மெண்டிரஸ் சமான்சிலர் (Menderes Samancilar),அகன் துனுஜ் (Aken Tunj)
படத்தொகுப்புமோசன் மக்மால்பஃப்
வெளியீடு7 செப்டம்பர் 2001 (துருக்கி)
ஓட்டம்75 நிமிட‌ங்க‌ள்
நாடுஈரான், துருக்கி
மொழிதுருக்கி, பாரசீக மொழி

ஒரே திரைப்படம் மூன்று பகுதிகளை அடக்கியது. அதே நடிகர்கள் அதே கதாப்பாத்திரம். குசால் என்ற ஒரு பெண்ணும், இரண்டு இளவயது ஆண்களும் என இத்திரைப்படத்தில் மூன்று முக்கிய கதாப்பாத்திரங்கள். இரு ஆண்களில் ஒருவர் கறுப்பு முடியும், மற்றொருவர் செம்பட்டை முடியும் உடையவர். இத்திரைப்படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் குஸால் இந்த இரு இளைஞர்களில் ஒருவரை மணக்கிறார்; மற்றொருவருடன் ரகசியக் காதலில் இருக்கிறார். இத்திரைப்படத்தில் வரும் ஒரு கிழவர் ஒவ்வொருமுறையும் அந்தப் பெண்ணின் தகாத உறவை அறிந்தவராக இருக்கிறார். மேலும் அப்பெண்ணின் கணவனிடம் அந்த விஷயத்தைச் சொல்கிறார்.

நடிகர்கள்

தொகு
  • ஷிவா கிரீட் (Shiva Gered)
  • அப்துர் ரஹ்மான் பாலே (Abdurrahman Palay)
  • மெண்டிரஸ் சமான்சிலர் (Menderes Samancilar)
  • அகன் துனுஜ் (Aken Tunj)

வெளி இணைப்புக‌ள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Festival de Cannes: Time of Love". festival-cannes.com. பார்க்கப்பட்ட நாள் 2009-09-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைம்_ஆப்_லவ்_(திரைப்படம்)&oldid=3850783" இலிருந்து மீள்விக்கப்பட்டது