டையெத்தினைல்பென்சீன் ஈரெதிர்மின்னயனி

மாற்றியன்களினால் ஆன வேதிச்சேர்மங்களின் குழு

டையெத்தினைல்பென்சீன் ஈரெதிர்மின்னயனி (Diethynylbenzene dianion) என்பது ஒரு பென்சீன் மூலக்கூறுடன் புரோட்டான் நீக்கப்பட்ட இரண்டு எத்தினைல் எதிர்மின் அயனிகள் இணைக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. இரண்டு கார்பன் அணுக்களின் அமைவிடத்தைப் பொறுத்து மூன்று மாற்றியன்கள் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது.

  • ஆர்த்தோ-டையெத்தினைல்பென்சீன் ஈரெதிர்மின்னயனி
  • மெட்டா-டையெத்தினைல்பென்சீன் ஈரெதிர்மின்னயனி
  • பாரா-டையெத்தினைல்பென்சீன் ஈரெதிர்மின்னயனி

இவை மூன்றும் நன்கு அறியப்பட்ட வலிமையான மூன்று காரங்களாகும் [1][2]. ஆத்திரேலியாவில் நிறை நிறமாலையியல் சோதனைகளின் போது ஆராய்ச்சியாளர்கள் இக்காரத்தை உருவாக்கினார்கள் [1].எத்தினைல் குழுக்கள் நெருக்கமாக அமைந்துள்ள மாற்றியன்கள் வலிமையான காரங்களாக உள்ளன. தொடர்புடைய பீனைலீன்டைபுரோப்பியோலேட்டு ஈரெதிர்மின் அயனிகளை உருவாக்கி பின்னர் நடுநிலையான கார்பனீராக்சைடு மூலக்கூறுகளாக முனைகளிலுள்ள நான்கு ஆக்சிசன் அணுக்களையும் இரண்டு கார்பன் அணுக்களையும் நீக்குவதன் மூலம் அம்மாற்றியன்கள் உருவாக்கப்படுகின்றன [1].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Poad, Berwyck L. J.; Reed, Nicholas D.; Hansen, Christopher S.; Trevitt, Adam J.; Blanksby, Stephen J.; Mackay, Emily G.; Sherburn, Michael S.; Chan, Bun et al. (12 January 2018). "Preparation of an ion with the highest calculated proton affinity: ortho -diethynylbenzene dianion". Chemical Science 7 (9): 6245–6250. doi:10.1039/C6SC01726F. பப்மெட்:30034765. பப்மெட் சென்ட்ரல்:6024202. http://pubs.rsc.org/en/content/articlehtml/2016/sc/c6sc01726f. பார்த்த நாள்: 12 January 2018. 
  2. Bergius, Will (19 July 2016). "Basically record breaking". Chemistry World.