டை மோ சான் மலை
டை மோ சான் மலை ( சீன: 大帽山 , ஆங்கிலம்: Tai Mo Shan ) என்பது ஹொங்கொங்கில் உள்ள அதிக உயரமான மலை குன்றாகும். இம்மலை குன்றின் உயரம் 957 மீட்டர்களாகும். இது ஹொங்கொங் புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில் அமைந்துள்ளது. இது 14.40 கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது ஹொங்கொங்கின் தேசிய வனப்பகுதியில் அமைந்துள்ளது. இது ஹொங்கொங்கில் உள்ள இன்னுமொரு மலைத்தொடரான டய் லாம் தேசிய வனம் பகுதியை வடக்காக கொண்டுள்ளது.
வெளியிணைப்புகள்
தொகுஒங்கொங்:விக்கிவாசல் |