டொடோமா

தான்சானியாவின் தலைநகரம்

டொடோமா (ஆங்கில மொழி: Dodoma), உத்தியோகபூர்வமாக டொடோமா நகர மாவட்டம், தன்சானியாவின் தலைநகரம்[1] ஆகும். இது டொடோமா பிரதேசத்தினதும் தலைநகரம் ஆகும். 2002 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை 324,327 ஆகும். 1973இல் தலைநகரை தாருஸ்ஸலாமிலிருந்து டொடோமாவுக்கு மாற்றத் திட்டமிடப்பட்டது. தன்சானியாவின் தேசிய சட்டசபை 1996இல் டொடோமோவுக்கு மாற்றப்பட்டது. எனினும் பெரும்பாலான அரச அலுவலகங்கள், வர்த்தகத் தலைநகரமான தாருஸ்ஸலாமிலேயே உள்ளன.

டொடோமா
நாடு தன்சானியா
பிரதேசம்டொடோமா பிரதேசம்
அரசு
 • மேயர்பிரான்சிஸ் மசாண்டா (Francis Mazanda)
பரப்பளவு
 • நிலம்2,576 km2 (995 sq mi)
ஏற்றம்1,120 m (3,670 ft)
மக்கள்தொகை (2002)
 • மொத்தம்3,24,347
 • அடர்த்தி125.9/km2 (326/sq mi)

மேற்கோள்கள்தொகு

  1. "Country Profile from the official website of Tanzanian website". 2012-05-29 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2009-09-08 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொடோமா&oldid=3419084" இருந்து மீள்விக்கப்பட்டது