டோகாமாக்
டோகோமாக் (tokamak) காந்தப் புலத்தை பயன்படுத்தி பிளாசுமாவை ஓர் குறிப்பிட்ட (வடை போன்ற) டோராயிடு வட்ட வடிவத்தில் அடைத்து வைக்க உருவாக்கப்பட்ட ஓர் இயந்திரமாகும். ஓர் நிலையான சமநிலை எய்திய பிளாசுமாவை உருவாக்க இந்த வட்ட அமைப்பினை சுற்றி உள்ள காந்தப் புலம் விரிபரப்புச் சுருளி வடிவில் இருத்தல் வேண்டும். இதனை டோராயிடு வடிவினுள் வட்டங்களாக செல்லும் புலத்தையும் இதற்கு செங்குத்தான தளத்தில் செல்லும் மற்றொரு புலத்தையும் சேர்ப்பதன் மூலம் நிறைவேற்றலாம். டோகாமாக்கில் முதலாவதான காந்தப்புலத்தை டோரசை சுற்றியுள்ள மின்காந்தங்கள் உருவாக்குகின்றன. மற்றதை பிளாசுமாவினுள் கடத்தப்படும் டோராயிடு வடிவ மின்னோட்டம் உருவாக்குகிறது. இந்த மின்னோட்டம் இரண்டாவது தொகுப்பு மின்காந்தங்களால் தூண்டுதலால் ஏற்படுகிறது.
பல்வகை காந்தப் புல அடக்கு இணைவு இயந்திரங்களில் டோகோமாக்கும் ஒன்று. கட்டுப்படுத்தப்பட்ட வெப்ப அணுக்கரு இணைவு ஆற்றல் உருவாக்கும் ஆய்வுகளில் மிகவும் ஆயப்படும் ஒரு இயந்திரமாகவும் டோகாமாக் விளங்குகிறது. பிளாசுமாவின் மிக உயர்ந்த வெப்பநிலைகளில் எந்த திண்மப்பொருளும் இருக்கவியலாதமையாலேயே காந்தப்புலம் பயன்படுத்தப்படுகிறது. டோகாமாக்கிற்கான ஓர் மாற்று இசுடெல்லரேடர் ஆகும். "யுரேனியம் கரு உலை" (UCR) போல டோகாமாக்குகள் பரவலாக அறியப்படவில்லை.
டோகாமாக்கினை 1950களில் ஓலெக் லாவ்ரெந்த்யெவின் ஆய்வால் ஊக்கமூட்டப்பட்டு சோவியத் இயற்பியலாளர்கள் இகார் டாம்மும் ஆந்திரே சகாரோவும் கண்டுபிடித்தனர்.[1]
டோகாமாக் என்ற சொல்லாக்கம் "காந்தப்புலம் கொண்டு டோராயிடு வடிவ அறை" என்ற சொற்றொடரிடரின் சுருக்கமாக அமைந்த உருசிய சொல் токамак ஒலிபெயர்த்தலாக உருவானது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Bondarenko B D "Role played by O. A. Lavrent'ev in the formulation of the problem and the initiation of research into controlled nuclear fusion in the USSR" Phys. Usp. 44 844 (2001) available online
- ↑ Merriam-Webster Online
இவற்றையும் காண்க
தொகு- பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனம், காந்திநகர்
- பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை - ஈடெர்
உசாத்துணைகள்
தொகு- Braams, C.M., Stott, P.E. (2002). Nuclear Fusion: Half a Century of Magnetic Confinement Research. Institute of Physics Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7503-0705-6.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - Dolan, Thomas J. (1982). Fusion Research, Volume 1 - Principles. Pergamon Press. வார்ப்புரு:LCC.
- Nishikawa, K., Wakatani, M. (2000). Plasma Physics. Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-65285-X.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - Raeder, J. (1986). Controlled Nuclear Fusion. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-10312-8.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Wesson, John (2000). The Science of JET. Archived from the original on 2007-08-10. பார்க்கப்பட்ட நாள் 2011-03-26.
- Wesson, John (2004). Tokamaks. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-850922-7.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help)
வெளியிணைப்புகள்
தொகு- CCFE பரணிடப்பட்டது 2020-10-28 at the வந்தவழி இயந்திரம் - site from the UK fusion research centre CCFE.
- Plasma Science - site on tokamaks from the French CEA.
- Fusion Programs பரணிடப்பட்டது 2009-10-04 at the வந்தவழி இயந்திரம் at General Atomics, including the DIII-D National Fusion Facility, an experimental tokamak.
- Fusion and Plasma Physics Seminar பரணிடப்பட்டது 2009-12-15 at the வந்தவழி இயந்திரம் at MIT OCW
- Unofficial ITER fan club, Club for fans of the biggest tokamak planned to be built in near future.
- www.tokamak.info Extensive list of current and historic tokamaks from around the world.
- SSTC-1 Overview video of a small scale tokamak concept.
- SSTC-2 Section View Video of a small scale tokamak concept.
- SSTC-3 Fly Through Video of a small scale tokamak concept.
- [1] பரணிடப்பட்டது 2008-12-21 at the வந்தவழி இயந்திரம் Information on conditions necessary for nuclear reaction in a tokamak reactor