டோக்கியோ தேசிய அருங்காட்சியகம்

டோக்கியோ தேசிய அருங்காட்சியகம் என்பது சப்பானின் பழைமைவாய்ந்த சபானியத் தேசிய அருங்காட்சியகம் ஆகும்.[2] இது 1872 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேலும் இந்த அருங்காட்சியகமே சப்பானின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ஆகும். அத்துடன் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகின்றது. சப்பானை மையமாகக் கொண்டதும், ஆசியா முழுவதையும் உள்ளடக்கிக் காணப்படும் தொல்பொருள் பொருட்கள், 87 சப்பானிய முக்கியப் புதையல்கள், பல சித்திரங்கள, 610 கலாசார விடயங்கள், 110 000 பிற பொருட்கள் என பல பொருட்களையும் இவ்வருங்காட்சியகம் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் இவ்வருங்காட்சியகம் பல ஆய்வுகளையும், கல்வி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது.

டோக்கியோ தேசிய அருங்காட்சியகம்
東京国立博物館
ஹொன்கன் கட்டிடம்
Map
நிறுவப்பட்டது1872
அமைவிடம்டைய்டோ, டோக்கியோ, சப்பான்
வகைஓவியக் காட்சியகம்
வருனர்களின் எண்ணிக்கை1.4 மில்லியன் (2013)[1]
Ranking 37th globally[1]
பொது போக்குவரத்து அணுகல்யுவெனோ நிலையம்
வலைத்தளம்http://www.tnm.jp/?lang=en

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Top 100 Art Museum Attendance, The Art Newspaper, 2014. Retrieved on 13 July 2014.
  2. Nussbaum, Louis-Frédéric. (2005). "Museums" in Japan Encyclopedia, pp. 671–673.