டோக்லாம் பிணக்கு
டோக்லாம் பிணக்கு, இந்தியா, சீனா மற்றும் பூடானுக்கு இடையில் அமைந்த சும்பி பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அமைக்கும் சாலை, பூடான் நிலப்பரப்பில் உள்ள டோக்லாம் வரை நீள்கிறது. டோக்லாம் பகுதியின் உரிமை சீனாவும் கோருகிறது. திபெத் மற்றும் பூடானின் கால்நடை மேய்ப்பாளர்கள், கால்நடைகளை மேய்க்க இந்தப் பகுதியை பயன்படுத்துகின்றனர்.
சீனா இங்கு சாலையை உருவாக்கி, இராணுவ ஆயுதங்களை குவிக்கமுடியும் என்று இந்திய ராணுவம் கருதுகிறது. சீனாவின் இச்செயல் இராணுவ ரீதியாகவும், பிற வகைகளிலும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனக் கருதுகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கான பாதையும் டோக்லாம் பகுதியை ஒட்டிச் செல்கிறது.
அகலம் குறைந்து நீண்டதாக தோன்றும் இந்த பதை, இந்தியாவில் சிலிகுரி பாதை அல்லது சிக்கன்ஸ் நெக் என்று அறியப்படுகிறது. இந்த பாதை சிக்கிம் மற்றும் பூடானை பிரிப்பதோடு, அசாம் மற்றும் இதர வடகிழக்கு பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கிறது.
நட்பு ஒப்பந்தம்
தொகு1910 ஆம் ஆண்டு, பிரித்தானிய இந்தியாவால் பாதுகாக்கப்பட்ட நாடாக பூடான் மாறியது. ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட பிறகு பூடானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின்கீழ் வந்தது. 1947இல் இந்தியா விடுதலை பெற்றபோது, பூடான் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டது. அதுமுதல் இந்தியா மற்றும் பூடான் இடையே நெருங்கிய இணக்கமான உறவு தொடர்கிறது. 1950இல் சீனா திபெத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டபோது, இந்தியாவுடனான பூடானின் உறவு மேலும் நெருக்கமானது.
பூடானின் எல்லை குறித்து சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. 1949இல் இந்தியாவுக்கும், பூடானுக்கும் இடையே நட்பு ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பூடானின் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியாவின் வழிகாட்டல் பெறுவது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் இரு நாடுகளும் கலந்தாலோசித்து செயல்படலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
பின்னர் 2007ல் மாற்றியமைக்கப்பட்ட ஒப்பந்தப்படி, பூடானின் வெளியுறவுக்கொள்கையில், இந்தியாவின் வழிகாட்டுதல்கள் மாற்றியமைக்கப்பட்டது.
டோக்லாமில் சீனா சாலை அமைக்க எதிர்ப்பு
தொகு16 சூன் 2017ல் டோக்லாமில் சீன இராணுவத்தினர் சாலைகள் அமைக்க முயன்றனர். டோக்லாமில் சாலை அமைக்கும் பணியை நிறுத்துமாறு, பூடான் இராணுவம், சீன இராணுவத்திடம் கூறியது. மேலும் புதுதில்லியில் உள்ள சீன தூதரகம் மூலமாக, பூடான் தூதர் சீன அரசுக்கு தங்கள் நாட்டின் டோக்லாமில் சாலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
டோக்லாமில் சீனாவின் நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக சீனாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, சீனா மற்றும் இதர நாடுகளிடையே எல்லை தொடர்பான விவகாரங்கள் ஆலோசனைகளுக்கு பிறகு தீர்மானிக்கப்படும் என்று 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்ப்பிடப்பட்டுள்ளது.
பூடான், இந்தியா, சீனா என மூன்று நாடுகளின் எல்லையில் இருக்கும் டோக்லாம் பகுதியில் சீனாவின் ஒருதலைபட்சமான நடவடிக்கை, ஒப்பந்தத்தை மீறும் செயல் என்பது இந்தியாவின் வாதம்.
முக்கிய காரணம்
தொகுபீஜிங்கில் மே, 2017ல் நடைபெற்ற வலயமும் பாதையும் மாநாட்டில் (Belt and Road Forum) இந்தியா கலந்துக் கொள்ளாதது, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான உறவுகளுக்கு முக்கியக் காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.[1][2]
டோக்லாம் பிணக்கின் தொடர்ச்சி
தொகுடோக்லாம் பிணக்கின் தொடர்ச்சியாக, இந்தியாவின் லடாக் பகுதியின் லே மாவட்டத்தில் உள்ள பாங்காங் ஏரிக் கரைப் பகுதியில் சீன இராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. [3] [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "இந்தியா-சீனா பதற்றத்தின் பின்னணி என்ன?". 15 August 2017 – via www.bbc.com.
- ↑ Diplomat, The. "The Diplomat". The Diplomat.
- ↑ "Pangong Lake is border flashpoint between India and China - Indian Express". archive.indianexpress.com.
- ↑ 6720.html As Doklam crisis continues, India-China border stand-off at Ladakh's Pangong lake[தொடர்பிழந்த இணைப்பு]