டோக்லாம்
டோக்லாம், பூடானில் தென்மேற்கில் இமயமலையில் அமைந்த குறுகிய பீடபூமியாகும். டோக்லாம் பீடபூமி பூடான், இந்தியா மற்றும் திபெத் தன்னாட்சிப் பகுதிகளை இணைக்கும் முச்சந்தியாக விளங்குகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 4,310 மீட்டர் உயரத்தில் பூடானில் அமைந்துள்ளது.
டோக்லாம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
பூடானின் தென்மேற்கில் உள்ள சும்பி பீடபூமியின் தென்கிழக்கில் அமைந்த சர்ச்சைக்குரிய டோக்லம் பீடபூமியின் வரைபடம் map | |||||||
சீன எழுத்துமுறை | 洞朗 | ||||||
எளிய சீனம் | 洞朗 | ||||||
|
டோக்லம் கணவாய் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தை, சீனாவின் திபெத்துடன் இணைக்கிறது.[1][2]
அமைவிடம்
தொகுஇந்தியாவையும், சீனாவையும் பிரிக்கும் சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதூ லா கணவாயிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் டோக்லம் பீடபூமி உள்ளது. துவக்கத்தில் திபெத்தின் சும்பி பீடபூமியின் பகுதியாக டோக்லாம் இருந்தது.
சீனாவுக்கும், வடகிழக்கு இந்தியாவின் மாநிலமான சிக்கிம் மற்றும் பூடான் நாட்டிற்கும் இடையிலான சந்திப்பில் டோக்லாம் பீடபூமி உள்ளது. சீனா - பூடான் இடையே, டோக்லம் பீடபூமி குறித்து சர்ச்சை நீண்டகாலமாக உள்ளது. டோக்லாம் பீடபூமியை பூட்டான் உரிமை கொண்டாடுவதற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது.
ஒப்பந்தங்கள்
தொகு1988 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் சீனாவும், பூடானும் எழுத்துப்பூர்வமாக செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இப்பகுதியை இது வரை உள்ள நிலையின் படியே இருக்கவும், இப்பகுதியில் இருநாடுகளும் அமைதி காக்கவும் ஒப்புக் கொண்டது.[3][4][5] 2017ல் டோக்லம் பகுதியில் சீனா சாலை அமைப்பதை பூடான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.[3]
2017ல் டோக்லம் குறித்தான சீனா-இந்தியவின் நிலைப்பாடுகள்
தொகுசூன், 2017ல் சீனா திபெத்தின் யாதோங் கவுண்டி முதல் டோக்லம் வரை சாலை அமைக்க, டோக்லம் பகுதியில் ஊடுவுருவிய சீனப் படைவீரர்களை, பூடான் மற்றும் இந்தியாவின் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.[6] [7] [8] இதனால் கோபமுற்ற சீன இராஜதந்திரிகள், இந்தியா மீது கடுமையான அறிக்கைகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளியிட்டு வருகிறது.[9] பின்னர் சீன படைவீரர்கள் இந்தியாவின் இரண்டு பதுங்கு குழிகளை தாக்கி அழித்துள்ளனர்.[9] மேலும் சீனா தனது நிலப்பரப்பை, இந்தியா ஆக்கிரமிப்பதாக கூறிவருகிறது.[10]
29 சூன் 2017ல் தனது நிலப்பரப்பான டோக்லமில் சீனா சாலை அமைப்பதை பூடான் எதிர்த்துள்ளது.[11] அதே நாளில் பூடான் – சீனா எல்லைப்புறங்களில் இந்தியா தனது படைகளை குவித்து வருகிறது.[12] சீனாவும் அதே நாளில், டோக்லம் மற்றும் சிக்கிமின் சில பகுதிகள் தனது நிலப்பரப்பே என புதிய வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு ஆதாரமாக 17 மார்ச் 1890 அன்று கல்கத்தா மாநாட்டில் (Calcutta Convention) பிரித்தானியப் பேரரசும், சீனாவின் சிங் பேரரசும் திபெத் மற்றும் சிக்கிம் குறித்து செய்து கொண்ட ஒப்பந்தத்தை சீனா அரசு நினைவுபடுத்துகிறது.[13] [14] மேலும் 3 சூலை 2017ல், கல்கத்தா ஒப்பந்தத்தை அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவும் ஏற்றுக் கொண்டதாக 3 சூலை 2017ல் சீனா தெரிவிக்கிறது.[15]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dutta, Sujan (5 July 2017). "Sikkim standoff: Doka La incursions betray Chinese intentions of getting behind Indian, Bhutanese defences". Firstpost இம் மூலத்தில் இருந்து 6 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. http://www.firstpost.com/india/sikkim-standoff-doka-la-incursions-betray-chinese-intentions-of-getting-behind-indian-bhutanese-defences-3778973.html.
- ↑ "Sikkim standoff: China releases 'map' to prove its claim over tri-junction border". 1 July 2017. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.
- ↑ 3.0 3.1 "Press Release – Ministry of Foreign Affairs". www.mfa.gov.bt. Archived from the original on 30 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ greenmindz.com. "Bhutan-China talks end in agreement - Bhutan Observer". www.bhutanobserver.bt. Archived from the original on 10 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "India enters into Bhutan-China border conflict – Bhutan News Network". www.bhutannewsnetwork.com. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.
- ↑ இந்திய-சீனா எல்லை மோதல் நிலையின் பின்னணி என்ன?
- ↑ Chinese and Indian troops face off in Bhutan border dispute ]
- ↑ [ Sikkim impasse: What is the India-China-Bhutan border standoff? ]
- ↑ 9.0 9.1 Staff (28 June 2017). "Indian bunker in Sikkim removed by China: Sources". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 6 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. http://timesofindia.indiatimes.com/india/indian-bunker-in-sikkim-removed-by-china-sources/articleshow/59354787.cms.
- ↑ Som, Vishnu (29 June 2017). "At Heart Of India-China Standoff, A Road Being Built: 10 Points". NDTV இம் மூலத்தில் இருந்து 29 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. http://www.ndtv.com/india-news/amid-india-china-standoff-army-chief-in-sikkim-today-10-facts-1718311.
- ↑ "Bhutan protests against China's road construction". The Straits Times. Jun 30, 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
- ↑ "Bhutan issues scathing statement against China, claims Beijing violated border agreements of 1988, 1998". Firstpost. Jun 30, 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
- ↑ Convention of Calcutta
- ↑ "EXCLUSIVE: China releases new map showing territorial claims at stand-off site". பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.
- ↑ "Nehru Accepted 1890 Treaty; India Using Bhutan to Cover up Entry: China". பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.