யாதோங் கவுண்டி
யாதோங் கவுண்டி (Yadong County), திபெத் தன்னாட்சிப் பகுதியின் தெற்கு எல்லைப்புறப் பகுதி ஆகும். இமயமலையின் நடுவில் அமைந்த சும்பி பீடபூமியில் அமைந்த யாதோங் கவுண்டி, 4,306 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 10,000 மக்கள் தொகை கொண்டுள்ளது. இந்தியாவின் நாதூ லா கணவாய் இதனருகில் உள்ளது.
யாதோங் கவுண்டி
亚东县 • གྲོ་མོ་རྫོང་། | |
---|---|
திபெத் தன்னாட்சிப் பகுதியில் யாதோங் கவுண்டியின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 27°31′9″N 88°58′12″E / 27.51917°N 88.97000°E | |
நாடு | சீனா |
மாகாணம் | திபெத் தன்னாட்சிப் பகுதி |
நிர்வாகத் தலைமையிடம் | சிகாசி |
நிர்வாகத் தலைமையிடம் | லிங்மா |
நேர வலயம் | ஒசநே+8 (சீனா சீர் நேரம்) |
சும்பி பீடபூமியில் அமைந்த இக்கவுண்டியின் மேற்கில் இந்தியாவின் சிக்கிம் மாநிலமும், தெற்கில் மேற்கு வங்காளம் மாநிலமும், மற்றும் கிழக்கில் பூடானையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இங்கு பல திபெத்திய பௌத்த விகாரைகளும், கோயில்களும் உள்ளது. [1]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Yadong Valley: Amongst Monasteries and Battle Sites". Archived from the original on 2017-08-30. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.