தகவமை மீள்பயன்பாடு

தகவமை மீள்பயன்பாடு (Adaptive reuse) என்பது, பழைய களங்களையும், கட்டிடங்களையும் அவை கட்டப்பட்ட அல்லது வடிவமைக்கப்பட்ட நோக்கங்கள் அல்லாத பிற நோக்கங்களுக்கு மீளப் பயன்படுத்தும் செயல்முறையைக் குறிக்கும். நகர்ப்புறப் பரவலைக் குறைப்பதற்கும், நிலத்தைச் சேமிப்பதற்கும் தகவமை மீள்பயன்பாடு முக்கிய காரணியாக அமையக்கூடும் என்ற கருத்து உள்ளது.[1] இருந்தாலும், புதுப்பித்தல், முகப்பியம், தகவமை மீள்பயன்பாடு ஆகியவற்றுக்கு இடையில் தெளிவில்லாத எல்லைகளே இருப்பதால், சிலவேளைகளில் தகவமை மீள்பயன்பாடு சர்ச்சைக்கு உள்ளாகக்கூடும். இது வரலாற்றுப் பாதுகாப்புக்கும், இடித்து அழித்தலுக்கும் இடையிலான ஒரு இணக்கநிலையாகக் கருதப்படுகிறது.

உலகின் வெற்றிகரமான தகவமை மீள்பயன்பாட்டுத் திட்டங்களில் ஒன்று. இலண்டனில் இருந்த பழைய பாங்க்சைட் மின் நிலையம் புதிய டேட் கலைக்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. Joachim, M. 2002, Adaptive reuse, Massachusetts Institute of Technology, Cambridge, Massachusetts, 1 Oct. 2011 <http://www.archinode.com/lcaadapt.html பரணிடப்பட்டது 2017-01-24 at the வந்தவழி இயந்திரம்>
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகவமை_மீள்பயன்பாடு&oldid=3214901" இருந்து மீள்விக்கப்பட்டது