தகவல் அடையாளம்
தகவல் அடையாளம் என்பது, பயனாளர்களுக்குத் தகவல்களை வழங்குவதற்கான அறிவிப்புப் பலகைகள் எனலாம். இது, ஒரு உண்மை, அல்லது ஒரு நிலைமை அல்லது ஒரு பண்பின் இருப்பை அறிவுறுத்துகின்றது.[1] தகவல் அடையாளங்கள் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுவதுடன், பல்வேறுபட்ட வகைகளாகவும் அமைகின்றன. சாலைப் போக்குவரத்தின் போது, எரிபொருள், உணவு, தங்குமிடம், தகவல் பெறும் இடம், மருத்துவமனை போன்றவை இருக்குமிடங்களை ஓட்டுனருக்கு அறிவுறுத்தும் வண்ணம் அமைக்கப்படிருக்கும் போக்குவரத்து அடையாளங்களும் தகவல் அடையாளங்களே. இது தவிர, பெரிய அங்காடித் தொகுதிகள், மருத்துவமனைகள், பொது அலுவலகங்கள், போக்குவரத்து நிலையங்கள், பொதுப் பூங்காக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களிலும் தகவல் அடையாளங்கள் பயன்படுகின்றன. தகவல் அடையாளங்கள் பல்வேறு பொருட்களால் ஆனவையாகவும், பலவகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவனவாகவும் உள்ளன. தகவல்களைக் கொடுப்பதற்காக இவற்றில் எழுத்துக்களை அல்லது வரையக் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர்.
முன்னர் மரப் பலகைகள், உலோகத் தகடுகள் போன்றவற்றில் எழுத்துக்களையோ படங்களையோ மையினால் வரைந்து தகவல் அடையாளங்களாகப் பயன்படுத்தினர். காலப்போக்கில் புதுப் புது நுட்பங்கள் உள்வாங்கப்பட்டு அடையாளங்கள் வடிவமைக்கப்பட்டன. தற்காலத்தில் மின்னணுத் தகவல் அடையாளங்கள் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளன.[2]
குறிப்புக்கள்
தொகு- ↑ Definition for Sign in The Free Dictionary.
- ↑ Use of Electronic Passenger Information Signage in Transit பக். 10-18.