தகவல் மற்றும் நூலக வலைய மையம்
தகவல் மற்றும் நூலக வலைய மையம் (Information and Library Network Centre)(சுருக்கமாக இன்ப்ளிப்நெட் மையம்-INFLIBNET Centre) என்பது இந்திய உயர்கல்விக்கான நூலகங்கள் மற்றும் தகவல் வளங்களை மேம்படுத்தி, எளிதாக்கும் ஒரு அமைப்பாகும். இதன் முதன்மை வளாகம் குசராத்தின் காந்திநகரில் உள்ளது.
தகவல் மற்றும் நூலக வலைய மையம் | |
---|---|
நாடு | இந்தியா |
வகை | நிறுவன தரவைப்பகம், பலகலைக்கழக ஒருங்கிணைவு |
தொடக்கம் | மார்ச்சு 1991 |
அமைவிடம் | 23°11′18″N 72°38′00″E / 23.18833°N 72.63333°E |
இணையதளம் | www |
Map | |
1991-ல் பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையத்தின் கீழ் இந்த மையம் ஓர் திட்டமாகத் தொடங்கப்பட்டது. இது ஜூன் 1996-ல் தன்னாட்சி நிறுவனமாக மாறியது. கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அறிக்கை அளித்தது. பல்கலைக்கழக நூலகங்கள் மற்றும் பிற தகவல் மையங்களை இணைக்கும் தேசிய அளவிலான அதிவேக தரவு வலையமைப்பை இம்மையம் இயக்குகிறது.
செயல்பாடுகள்
தொகுஇந்தியப் பல்கலைக்கழகங்களில் நூலக சேவைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை இந்த மையம் வழிநடத்துகிறது. இவற்றில் பின்வருவன அடங்கும்:
- பல்கலைக்கழக நூலகங்களை தானியக்கமாக்குவதற்கான நிதி உதவி
- இந்தியாவில் உள்ள நூலகங்களில் உள்ள வளங்களின் தரவுத்தளத்தை உருவாக்குதல்
- ”சோல்” என்ற பெயரில் ஒரு நூலக மேலாண்மை பயன்பாட்டு மென்பொருளை உருவாக்குதல்[1]
- பல்கலைக்கழக மானியக் குழு-தகவல் வலை, இணைய இணைப்புத் திட்டம்
திறந்த அணுகல் முயற்சிகளில் பின்வருவன அடங்கும்:
- ஓஜாசு (OJAS), பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான ஆய்விதழ் தளம் [2]
- சூத்கங்கா, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள ஆராய்ச்சி அறிஞர்களின் ஆய்வறிக்கைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிம களஞ்சியமாகும் [3]
- சூத்கங்கோத்தரி, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி தலைப்புகளின் சுருக்கங்களின் எண்ணிம களஞ்சியமாகும் [4]
- IR@INFLBNET, காகிதங்களின் களஞ்சியம்
- திறந்த இணைய அணுகல் வசதியுடன் ஆராய்ச்சி மேம்பாடு வசதிக்கான பணிக்குழுக்களை உருவாக்குதல்
- இந்தியாவில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் தரவுத்தளத்தைப் பராமரித்தல்
- பிப்லியோமெட்ரிக் மற்றும் சைன்டோமெட்ரிக் ஆய்வுகள்
- மின்னணு-மேநி-பாடசாலை (e-PG Pathshala), முதுகலை படிப்புகளுக்கான நுழைவாயில்
- நூலக மேலாண்மை மற்றும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவற்றில் பயிற்சி வகுப்புகள்
வெளியீடுகள்
தொகுதகவல் மற்றும் நூலக வலைய மையம் காலாண்டு செய்தி மடல் மற்றும் ஆண்டு அறிக்கையை வெளியிடுகிறது. இவை நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகுமேலும் படிக்க
தொகு- Shahaji Shankar Waghmode. "Role of INFLIBNET in Growth and Development of Higher Education in India" (PDF). e-LiS. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.