தகியா கோட்பாடு

தகியா கோட்பாடு அல்லது தஃயா கோட்பாடு (Dahiya doctrine / Dahya doctrine)[1] என்பது எதிராளி ஆட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பொதுமக்கள் உள்கட்டமைப்பை அழிப்பதை உள்ளடக்கிய இஸ்ரேலிய இராணுவ உத்தி ஆகும்.[2] இது சமச்சீரற்ற போர்முறை ஆகும். இது "விகிதாச்சாரமற்ற சக்தி" (எதிரி பயன்படுத்தும் சக்தியின் அளவுடன் ஒப்பிடும்போது) செயற்பாட்டை ஆதரிக்கிறது.[3] இந்த கோட்பாட்டை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதான தளபதி காடி ஐசன்கோட் திட்டவரை செய்தார்.

2006 லெபனான் போருக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2008 இல் தகியாவில் ஒரு பள்ளம்

2006 லெபனான் போரின் போது ஹிஸ்புல்லா தலைமையிடமாக இருந்த பெய்ரூத்தின் தகியா என்ற இடத்தின் பெயரால் இது பெயரிடப்பட்டது. இது இஸ்ரேல் பாதுகாப்புப் படை தாக்குதலால் பெரிதும் சேதமடைந்தது.[2]

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "From War to Deterrence? Israel-Hezbollah Conflict Since 2006". Archived from the original on 12 January 2015. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.
  2. 2.0 2.1 'the threat to destroy civilian infrastructure of hostile regimes, as Israel did to the Dahiya neighborhood of Beirut, where Hizbollah was headquartered in 2006' Daniel Byman , A High Price: The Triumphs and Failures of Israeli Counterterrorism, Oxford University Press, 2011 p.364
  3. Amos Harel (5 October 2008). "ANALYSIS / IDF plans to use disproportionate force in next war". Haaretz. பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகியா_கோட்பாடு&oldid=4051325" இலிருந்து மீள்விக்கப்பட்டது