தகைமை இயல்பு
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
தகைமை இயல்பு (Adaptive behavior) என்பது உயிரினங்கள் தம்மை சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டு புதிய வடிவம் பெறுவதை குறிப்பதாகும்.
உயிரினங்களின் உயிர்ப்பில் வெற்றிகரமான மீளுற்பத்தியில் தகைமை இயல்பு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு முக்கிய பங்காற்றுகிறது. அந்தவகையில் தகவமைவு இயற்கைத் தேர்வின் உள்ளாற்றலாக இருக்கிறது.[1] இனப் பெருக்கத்திற்கு இணக்கமாக இருத்தல் உட்பட புலத் தற்காப்பிற்கும், எதிராளிகளிடமிருந்து தற்காக்கவும் பலமிக்க ஆணைத் தேர்வு செய்வதே பெண்மையின் பொதுவான பண்பு.
இன்னொரு வகையில், சமன் உற்பத்தியில் தகவமைவற்ற நடத்தையே ஒரு இயல்பான நடத்தையாகவும் (அ) தனிக்கூறாகவும் இருக்கிறது. தனிப்பட்ட உயிர்ப்பத்தியில் (அ) வெற்றிகரமான மீளுற்பத்தியில் (பழைய) உறவிற்கு இணக்கமற்றிருப்பதும், உறவில்லாத (புதிய) இளமையுடன் தகவமைவதும், படிநிலை ஆதிக்கத்திற்குத் துணைக்கூறாக இருப்பதும் இவற்றின் பொதுமை நடத்தையாக இருக்கும்.
சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தொடர்கிறபோது உயிர்த்திருத்தலில் (அ) மீளுற்பத்தியில் காணப்படும் தீர்வைத் தகவமைவு என்று புரிந்து கொள்ளலாம். பொதுவாக தனித்த வேறுபாடுகள் மரபுரீதியான, மரபுரீதியற்ற தகவமைவு நடத்தையின் ஊடாகவே எழும். உயிர்களின் தகவமைவு நடத்தைகளில் பரிணாமம் செலுத்திய தாக்கம் என்ன என்பது இவ்விரண்டிலும் நிரூபிக்கப்பட வேண்டும். மரபுரீதியாகத் தான் தகவமைகிறது என்றாலும் அதிலும் கருத்து மாறுபாடுகள் நீடித்து வருகின்றன.[2]
மரபுரீதியற்ற தகைவமை இயல்பு
தொகுபரிணாமச் செயல்பாட்டின் வழியாக உயிர்த் தொகுதியில் மாற்றம் நிகழ்கிறது. உயிர்த் திரளினுள் ஒவ்வொரு தனித்த உயிருக்கும் குறிப்பிட்ட சூழலைப் பொறுத்து தனித்துவமான பங்கு உண்டு. பொதுவாக சூழல்கூறு என்றியப்படும் இது குறிப்பிட்ட சூழலில் அக்கூறு பிற உயிர்த்த மூலகங்களோடு எத்தகைய உறவு கொள்கிறது என்பதை வைத்து அதன் தன்மை அறிப்படுகிறது.[3] ஒரு மூலகம் தனது சூழல் கூறினை வளர்ப்பதற்கு பல தலைமுறைகளாக புறச்சூழலுடன் வெற்றிகரமாகத் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். புறச் சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மூலகத்தின் சூழல்கூறு ஆக்கமடையும். தனது முந்தை ஞானத்தை உயர்த்திக் கொள்ள தனது தகமைவு நடத்தையைப் பயன்படுத்த முடிந்த உயிரி தான் இயற்கையில் வெற்றி பெற்றிருக்கிறது. இவ்வுயிரி தான் தனது உயிர்ப்பைத் தக்க வைத்துக் கொண்டு மீளுற்பத்தியையும் வெற்றிகரமாகச் செய்து கொண்டு வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ecology and Behavior from Biology: The Unity and Diversity of Life 10th edition. Starr and Taggart 2004. Thompson publishers பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-534-39746-8
- ↑ Buss, D.M. and Greiling, H. 1999. Adaptive individual differences. Journal of Personality, 67: 209-243.
- ↑ Staddon, J. E. R. (1983). Adaptive Behavior and Learning. Cambridge University Press.