தக்களூர் திருலோகநாதர் கோயில்
தக்களூர் திருலோகநாதர் கோயில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுமயிலாடுதுறை-பேரளம்-காரைக்கால் சாலையில் திருநள்ளாற்றினை அடுத்து 1 கிமீ தூரத்தில் வலப்புறத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. [1]
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் திருலோகநாதர் ஆவார். இறைவி தர்மசம்வர்த்தினி ஆவார். [1]
பிற சன்னதிகள்
தொகுமுன் மண்டப மூலையில் பைரவர், சந்திரன் உள்ளனர். வெளிச்சுற்றில் விநாயகர், விசுவநாதர் சிவலிங்கம், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். [1]