தங்கசேரி அணைகரை சுற்றுலா பூங்கா
தங்கசேரி அணைகரை சுற்றுலாப் பூங்கா (Thangassery Breakwater Tourism Park) இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஒரு சுற்றுலாத் தலமாகும். [1] கொல்லம் மாவட்டத்தில் கடலோர நகரமான தங்கசேரியில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பூங்கா அமைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதியன்று பூங்கா திறக்கப்பட்டது, [2] அதன் பின்னர் ஏராளமான பார்வையாளர்களையும் ஈர்த்து வருகிறது. [3]
தங்கசேரி அணைகரை சுற்றுலாப் பூங்கா Thangassery Breakwater Tourism Park | |
---|---|
வகை | Urban park |
அமைவிடம் | தங்கசேரி, கொல்லம் நகரம், இந்தியா |
ஆள்கூறு | 8°52′50″N 76°34′03″E / 8.880457176231554°N 76.56751212053223°E |
பரப்பளவு | 2.5 ஏக்கர் |
உருவாக்கம் | 2023 |
உரிமையாளர் | சுற்றுலாத் துறை, துறைமுகப் பொறியியல் துறை |
இயக்குபவர் | கேரள சுற்றுலாத்துறை , கொல்லம் |
நிலை | ஆண்டு முழுவதும் |
அரபிக் கடலின் அழகிய காட்சிகளைக் கொண்ட இந்த பூங்கா ஓர் அழகான நீர்முகப்பு பகுதி இடமாகும். [4] குழந்தைகள் விளையாட்டு மைதானம், படகு சவாரி ஏரி, உணவு அரங்கம் மற்றும் பல நினைவு பரிசு கடைகள் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. 400 பேர் வரை தங்கக்கூடிய திறந்தவெளி அரங்கமும் இங்கு உள்ளது. [5] கடலோர சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறையால் தொடங்கப்பட்டது இந்த தங்கசேரி அணைகரை சுற்றுலா பூங்கா திட்டமாகும் [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ഓണസമ്മാനമായി തങ്കശ്ശേരി ബ്രേക്ക് വാട്ടർ ടൂറിസം പദ്ധതി" (in மலையாளம்).
- ↑ "തങ്കശ്ശേരി ബ്രേക്ക് വാട്ടർ ടൂറിസം പാർക്ക് ഉദ്ഘാടനം ഇന്ന്" (in மலையாளம்).
- ↑ "Minister to inaugurate Thangassery Breakwater Tourism Park today" (in Indian English).
- ↑ Daily, Keralakaumudi. "തങ്കശേരി ബ്രേക്ക് വാട്ടർ പാർക്ക് തുറക്കാൻ ധാരണ" (in ஆங்கிலம்).
- ↑ "Why you should visit newly opened Thangassery break water tourism park" (in en). https://www.onmanorama.com/travel/kerala/2023/05/17/kollam-thangassery-break-water-tourism-park-visitors.html.
- ↑ "തങ്കശേരി ബ്രേക്ക് വാട്ടർ ടൂറിസം നാടിന് സമർപ്പിച്ചു; പി എ മുഹമ്മദ് റിയാസ്".