தங்கம்(I,III) குளோரைடு

வேதிச் சேர்மம்

தங்கம்(I,III) குளோரைடு (Gold(I,III) chloride) என்பது Au4Cl8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் திண்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. தங்கம்(I,III) குளோரைடில் தங்கம் இரண்டு வேறுபட்ட ஆக்சிச்னேற்ற நிலைகளில் காணப்படுகிறது. சதுர-தள தங்கம்(III) மற்றும் கிட்டத்தட்ட நேரியல் வடிவ தங்கம்(I) என்பன அவ்விரண்டு நிலைகளாகும். கலப்பு இணைதிறன் கொண்ட சேர்மத்திற்கும் இதை உதாரணமாக கூறலாம். ஒளி உணர், காற்று உணர், ஈரம் உணர் சேர்மம் என்பதால் தங்கம்(I,III) குளோரைடை கையாள்கையில் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.

தங்கம்(I,III) குளோரைடு
Skeletal formula of gold(I,III) chloride with implicit oxidation states shown
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
டெட்ரா-μ-குளோரோடெட்ராகுளோரோடெட்ராதங்கம்
வேறு பெயர்கள்
கலப்பு தங்க குளோரைடு, டெட்ராதங்கம் ஆக்டா குளோரைடு,
இனங்காட்டிகள்
62792-24-9 Y
InChI
  • InChI=1S/4Au.4ClH.4Cl/h;;;;4*1H;;;;/q;;2*+2;;;;;;;;/p-4 N
    Key: NWBJVUUFMJPGPV-UHFFFAOYSA-J N
யேமல் -3D படிமங்கள் Image
Image
  • Cl[Au]1(Cl)[Cl][Au][Cl][Au](Cl)(Cl)[Cl][Au][Cl]1
  • [Cl-].[Cl-].[Cl-].[Cl-].[Cl-].[Cl-].[Cl-].[Cl-].[Au+].[Au+].[Au+3].[Au+3]
பண்புகள்
Au
4
Cl
8
வாய்ப்பாட்டு எடை 1071.490 கி மோல்−1
தோற்றம் கருப்பு படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

தங்கம்(III) குளோரைடுடன் தங்கம் கார்பனைல் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் தங்கம்(I,III) குளோரைடை தயாரிக்க முடியும்[1]. அல்லது அறை வெப்பநிலையில் தயோனைல் குளோரைடிலுள்ள கார்பன் மோனாக்சைடை தங்கம்(III) குளோரைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்கலாம்[2] . Au2(CO)Cl4 + Au2Cl6 → COCl2 + Au4Cl8 2 Au2Cl6 + 2 CO → Au4Cl8 + 2 COCl2

கட்டமைப்பு

தொகு

தங்கம்(I,III) குளோரைடின் ஒற்றை படிகங்கள் ஒரு P1 என்ற இடக்குழுவுடன் முச்சரிவச்சு கட்டமைப்பில் காணப்படுகின்றன. இவை சிறப்பு C2h சீரொழுங்கிலுள்ள தனித்தியங்கும் Au4Cl8 மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளன [1]. இவற்றுக்குள் Au(I) மையங்கள் 175.0° (180 என்பது தனிச்சிறப்பு மதிப்பு) பிணைப்புக் கோணம் கொண்ட Cl-Au-Cl நேரியல் பிணைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இப்பிணைப்பின் சராசரி பிணைப்பு நீளம் 2.30 ஆங்சுடிராங்கு ஆகும். அதேவேளையில் Au(III) மையங்கள் சற்றே ஒழுங்கற்ற சதுரத் தள உறுதிப்பாட்டுடன் Au-Cl பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளன. விளிம்பு நிலை குளோரைடுகளை பிணைக்கும் 2.24 Å என்ற பிணைப்பு நீளத்தைக் காட்டிலும் மேற்கண்ட பிணைப்பிலுள்ள குளோரைடு பாலங்களின் பிணைப்பு நீளம் 2.33 Å ஆக இருக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Dell'Amico, Daniela Belli; Calderazzo, Fausto; Marchetti, Fabio; Merlino, Stefano; Perego, Giovanni (1977). "X-Ray crystal and molecular structure of Au4Cl8, the product of the reduction of Au2Cl6 by Au(CO)Cl". Journal of the Chemical Society, Chemical Communications (1): 31. doi:10.1039/C39770000031. 
  2. Dell'Amico, Daniela Belli; Calderazzo, Fausto; Marchetti, Fabio; Merlino, Stefano (1982). "Synthesis and molecular structure of [Au4Cl8], and the isolation of [Pt(CO)Cl5] in thionyl chloride". Journal of the Chemical Society, Dalton Transactions (11): 2257. doi:10.1039/DT9820002257. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்(I,III)_குளோரைடு&oldid=2935015" இலிருந்து மீள்விக்கப்பட்டது