தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்

தங்கால் திருத்தங்கால் என்பது ஓர் ஊர். அதில் வாழ்ந்த புலவர் ஆத்திரேயன் செங்கண்ணனார். ஆத்திப் பூவை சூடும் சிவபெருமான் ஆத்தி அரையன். ஆத்தி அரையன் என்னும் பெயர் ஆத்திரேயன் ஆயிற்று. செங்கண்ணன் என்னும் சொல்லும் சிவபெருமானைக் குறிக்கும்.

இந்தப் புலவர் பாடியதாகச் சங்கப்பாடல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது நற்றிணை 386அம் பாடலாக உள்ளது.

தினையை மேய்ந்த காட்டுப் பன்றி பசியாறிய மயக்கத்தில் மலைக் குகையில் பசியால் வாடும் வேங்கைப் புலியைப் பற்றிக் கவலை கொள்ளாமல் தூங்கிக்கொண்டிருக்கும் என்று இப்புலவர் கூறும் உள்ளுறைப் பொருளில் பரத்தையைத் துய்த்த தலைவன் தனிமையில் வாடும் தலைவியைப் பற்றிக் கவலை கொள்ளாமல் உறங்குவதுதான் உலகியல்பு என்னும் உண்மையைப் பெறவைக்கிறார்.