தசைநாண் (tendon) எனப்படுவது பொதுவாக தசையை எலும்புடன் இணைக்கும் கடினமான நார் இணைப்பிழையப் பட்டையாகும். இது உடல் உறுப்புக்களில் ஏற்படக்கூடிய இழுவை நிலைகளுக்கு ஈடுகொடுத்து, உடலைப் பேண உதவும். இணைப்பிழை (Ligament), இழையப்படலம் (Fasia) போன்றவற்றைப் போன்றே, இந்த தசைநாண்களிலும் இருக்கும் கொலாஜன் வகைப் புரதமே இவற்றின் இந்த இயல்புக்குக் காரணமாகும். மேலும் தசைநாணில் இருக்கும் இலாஸ்டின் எனப்படும் மீண்மநார்ப் புரதமானது, இழுவைக்குட்படும் இழையங்கள் மீண்டும் தனது பழைய நிலைக்கு வருவதில் உதவும். தசைநாண்கள் தசைகளுடன் இணைந்து தொழிற்படும்.

மனித உடலிலுள்ள தசைநாண்களில் ஒன்றான Achilles தசைநாண்

அமைப்பு

தொகு
 
நுணுக்குக்காட்டியில் பார்க்கும்போது ஹீமோட்டொக்சிலீன்-இயோசின் சாயமூட்டப்பட்ட தசைநாண் துண்டொன்றின் தோற்றம்

இழையவியல் அடிப்படையில், தசைநாணானது, ஒரு அடர்த்தியான இணைப்பிழைய உறையினால் மூடப்பட்ட, கட்டாக இருக்கும் அடர்த்தியான இணைப்பிழையங்களைக் கொண்டது. ஆரோக்கியமான தசைநாணில் அருகருகாக வரிசையில் நெருக்கமாக அடுக்கப்பட்ட கொலாஜன் நார்கள் காணப்படுவதுடன், அவை வெள்ளை நிறமாக இருக்கும்[1]. கிட்டத்தட்ட 30 % நீரைக் கொண்டதாக இருக்கும் தசைநாணானின் உலர்நிறையில் ~86% கொலாஜன், 2% இலாஸ்டின், 1–5% proteoglycans இருப்பதுடன், 0.2% செப்பு, மாங்கனீசு, கல்சியம் போன்ற கனிமப்பொருட்களும் காணப்படும்[2][3].

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசைநாண்&oldid=3520474" இலிருந்து மீள்விக்கப்பட்டது