தஞ்சாவூர் ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெரு முருகன் கோயில்

தஞ்சாவூர் ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெரு முருகன் கோயில் தஞ்சாவூர் நகரில் ஆட்டுமந்தை அஞ்சல்காரத் தெருவில் அமைந்துள்ளது.

கோயில் முகப்பு

மூலவர்

தொகு

இங்குள்ள மூலவர் முருகன் நின்ற நிலையில் உள்ளார்.

கோயில் அமைப்பு

தொகு

நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் முன் மண்டபத்தில் வடப்புறம் ஐயப்பன் சன்னதியும், இடப்புறம் விஷ்ணுதுர்க்கை சன்னதியும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு எதிரில் மயில் உள்ளது. கருவறைக்கு வெளியே வலப்புறம் இடும்பனும், இடப்புறம் கணபதியும் உள்ளனர்.

திருச்சுற்று

தொகு

திருச்சுற்றில் நவக்கிரக சன்னதி, பிரகதீஸ்வரர் சன்னதி, பெரிய நாயகி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. பிரகதீஸ்வரர் சன்னதிக்கு முன்பாக, பெரிய நாயகி சன்னதிக்கு முன்பாகவும் நந்தியும், பலிபீடமும் உள்ளன. நவக்கிரக சன்னதிக்கு சற்று முன்பாக சண்டிகேஸ்வரரும், கால பைரவரும் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் பிரம்ம ஆஞ்சநேயர், பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.

தஞ்சாவூர் அறுபடை வீடு

தொகு

தஞ்சாவூரில் உள்ள அறுபடைவீடுகளாக மேலஅலங்கம் முருகன் கோயில் (திருப்பரங்குன்றம்), வடக்கு அலங்கம் முருகன் கோயில் (பழமுதிர்சோலை), குறிச்சித் தெரு முருகன் கோயில் (திருத்தணி), ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெரு முருகன் கோயில் (சுவாமிமலை), சின்ன அரிசிக்காரத் தெரு முருகன் கோயில் (பழனி), பூக்காரத்தெரு முருகன் கோயில் (திருச்செந்தூர்) ஆகியவற்றைக் கூறுகின்றனர். [1] சுமார் 40 வருடங்களாக இப்பகுதியிலுள்ள முருக பக்தர்கள் ஒரே நாளில் இந்த அனைத்து முருகன் கோயில்களுக்கும் பாத யாத்திரையாகச் சென்று வருகின்றனர்.[2]

மேற்கோள்கள்

தொகு