தஞ்சாவூர் குறிச்சித்தெரு முருகன் கோயில்
தஞ்சாவூர் குறிச்சித்தெரு முருகன் கோயில் தஞ்சாவூர் நகரில் குறிச்சித் தெருவில் அமைந்துள்ளது.
மூலவர்
தொகுகருவறையில் முருகன் வள்ளி தெய்வானையுடன் காணப்படுகிறார். கருவறைக்கு முன்பாக வலப்புறம் விநாயகர் உள்ளார். எதிரில் மயிலும், பலி பீடமும் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
தொகுமூன்று நிலை ராஜகோபுரத்தைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. முகப்பில் அறுபடை வீடுகளில் காணப்படுகின்ற முருகனின் திருமேனிகள் சுதை வடிவில் காணப்படுகின்றன. நடுவில் சிவனும் பார்வதியும் காளை மீது அமர்ந்துள்ள நிலையில் அவர்களின் வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகனும் நின்ற நிலையில் உள்ளனர். வாயிலை அடுத்து காணப்படுகின்ற முன் மண்டபத்தில் வலது புறம் உள்ள தூணில் விநாயகரும், இடது புறம் உள்ள தூணில் முருகனும் உள்ளனர். மண்டபத்தின் இடது புறம் நடராஜர் சிவகாமியுடன் உள்ளார். அடுத்து லிங்கத் திருமேனி உள்ளது. அதற்கு முன்பாக நந்தியும் பலி பீடமும் உள்ளன.திருச்சுற்றில் பின் புறம் நாக சிற்பம் உள்ளது. தேவகோட்டத்தில் துர்க்கையம்மன் உள்ளார். கோயிலின் இடப்புறம் நவக்கிரக சன்னதி உள்ளது. அடுத்து ஆஞ்சநேயர் உள்ளார்.
குடமுழுக்கு
தொகுஇக்கோயிலில் 24 ஆகஸ்டு 1984இல் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு காணப்படுகிறது.
தஞ்சாவூர் அறுபடை வீடு
தொகுதஞ்சாவூரில் உள்ள அறுபடைவீடுகளாக மேலஅலங்கம் முருகன் கோயில் (திருப்பரங்குன்றம்), வடக்கு அலங்கம் முருகன் கோயில் (பழமுதிர்சோலை), குறிச்சித் தெரு முருகன் கோயில் (திருத்தணி), ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெரு முருகன் கோயில் (சுவாமிமலை), சின்ன அரிசிக்காரத் தெரு முருகன் கோயில் (பழனி), பூக்காரத்தெரு முருகன் கோயில் (திருச்செந்தூர்) ஆகியவற்றைக் கூறுகின்றனர்.[1] சுமார் 40 வருடங்களாக இப்பகுதியிலுள்ள முருக பக்தர்கள் ஒரே நாளில் இந்த அனைத்து முருகன் கோயில்களுக்கும் பாத யாத்திரையாகச் சென்று வருகின்றனர்.[2]