தஞ்சாவூர் உற்சவ கோடியம்மன் கோயில்
தஞ்சாவூர் உற்சவ கோடியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் உள்ள அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் மேலவீதியில் கொங்கனேசுவரர் கோயிலுக்கு சற்று முன்பாக ஓமளிப்பிள்ளையார் கோயில் வளாகத்தினையொட்டி காணப்படுகிறது.
தேவஸ்தான கோயில்
தொகுதஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]
மூலவர்
தொகுமூலவர் சன்னதியில் உற்சவரான கோடியம்மன் உள்ளார்.
அமைப்பு
தொகுநுழைவாயில், கருவறை, மண்டபம் போன்ற அமைப்புகளைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. வளாகத்தில் வலது புறம் ஓமளிப்பிள்ளையார் கோயில் உள்ளது. இரு கோயிலுக்கும் தனித் தனி வாயில்கள் உள்ளன. பச்சைக்காளி, பவளக்காளி காணப்படுகின்றன.
மற்றொரு கோடியம்மன் கோயில்
தொகுமற்றொரு கோடியம்மன் கோயில் தஞ்சாவூரில் உள்ளது. அக்கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 3 கிமீ தொலைவில் கருந்தட்டாங்குடியை அடுத்து அமைந்துள்ளது. அங்கு மூலவராக கோடியம்மன் உள்ளார். அவர் தாரகாசுரனை வதம் செய்து பராசர முனிவரின் கோரிக்கையை ஏற்று அதே கோலத்தில் நின்றபடி சாந்தாகார உருவமாகக் காட்சியளிக்கிறார்.