தஞ்சாவூர் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில்

தஞ்சாவூர் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில் தஞ்சாவூரில் உள்ள வைணவக் கோயிலாகும்.

மூலவர் விமானம்

அமைவிடம்

தொகு

தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் கரந்தட்டாங்குடியை அடுத்துள்ள வெண்ணாற்றங்கரை பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.

மூலவர்

தொகு

இக்கோயிலின் மூலவராக கல்யாண வெங்கடேசப் பெருமாள் உள்ளார்.

அமைப்பு

தொகு
 
நுழைவாயில்

இக்கோயில் சாலையின் வலது புறம் உள்ளது. முதன்மை நுழைவாயில், முன் மண்டபம், மூலவர் கருவறை, விமானம், இறைவி கருவறை, விமானம் என்ற அமைப்பில் உள்ளது. மூலவராக கல்யாண வெங்கடேசப் பெருமாள் உள்ளார். கோயிலின் வலது புறம் மற்றொரு நுழைவாயில் உள்ளது. பெரும்பாலும் முதன்மை நுழைவாயிலையே பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.

அருகிலுள்ள திவ்யதேசம்

தொகு

இக்கோயிலுக்கு அருகில் தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் வெண்ணாற்றங்கரை அருகே உள்ள கீழ்க்கண்ட மூன்று கோயில்களும் ஒரே திவ்ய தேசமாக சாலையின் இடது புறம் காணப்படுகின்றன.

  1. அருள்மிகு மேலசிங்கப்பெருமாள் திருக்கோயில்
  2. அருள்மிகு மணிகுண்ணப்பெருமாள் திருக்கோயில்
  3. அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில்

மேற்கோள்கள்

தொகு