தஞ்சாவூர் நீலமேகப் பெருமாள் கோயில்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு வைணவக் கோயில்

தஞ்சாவூர் நீலமேகப் பெருமாள் கோயில் தஞ்சாவூரில் அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.

நுழைவாயில்

தேவஸ்தான கோயில்

தொகு

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]

அமைவிடம்

தொகு

தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் கரந்தட்டாங்குடியை அடுத்துள்ள வெண்ணாற்றங்கரை பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.

அமைப்பு

தொகு
 
மூலவர் சன்னதி

கோயிலுக்கான நுழைவாயில் சிறிய ராஜகோபுரத்தைக் கொண்டு அமைந்துள்ளது. நுழைவாயிலை அடுத்து பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்து கருடன் சன்னதி உள்ளது.

முன் மண்டபத்திற்கு அடுத்து கருவறை உள்ளது. கருவறையில் நீலமேகப்பெருமாள் உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் வராகப்பெருமாள், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், விஷ்வக்சேனர் ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதியின் வலப்புறம் தாயார் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் வலப்புறம் லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியும், இடப்புறம் ஆழ்வார், ஆச்சார்யார்கள் சன்னதியும் உள்ளன. இச்சன்னதியில் ஆழ்வார்கள், தேசிகன், ராமானுஜர் சன்னதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.

நவநீத சேவை

தொகு

நவநீத சேவையின்போது தஞ்சாவூரிலுள்ள நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாண வெங்கடேசப்பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன் கோயில், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமபெருமாள், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசபெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதபெருமாள், படித்துறை வெங்கடேசபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் கலந்துகொள்கின்றனர். [3] அந்த கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.

குடமுழுக்கு

தொகு

27.11.1960 மற்றும் 1.11.2009இல் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டுகள் கோயிலில் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 வ.எண்.67
  2. J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur
  3. தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை, மாலை மலர், 30 மே 2016[தொடர்பிழந்த இணைப்பு]