தஞ்சாவூர் யாதவ கண்ணன் கோயில்
தஞ்சாவூர் யாதவ கண்ணன் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் கரந்தட்டாங்குடியில் அமைந்துள்ளது.
அமைப்பு
தொகுகி.பி.1755இல் யாதவர்களின் நாட்டாண்மையாக இருந்த பெரியண்ணாவின் முயற்சியால், அப்போது தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னரான பிரதாப சிம்மனால் இக்கோயில் கட்டப்பட்டது. [1] ராஜகோபுரம், கருவறை, விமானம், முன் மண்டபம், கொடி மரம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது.
மூலவர்
தொகுகருவறையில் சத்தியபாமா ருக்மணியுடன் வேணுகோபாலசுவாமியாக மூலவர் உள்ளார். உற்சவ மூர்த்தி யாதவ கண்ணன் நர்த்தன கோலத்தில் உள்ளார். கோயிலின் உள் திருச்சுற்றில் திருப்பதி பாலாஜியின் நின்ற கோலத்தினைக் காணலாம்.[1]
விழாக்கள்
தொகுகிருஷ்ண ஜெயந்தி விழா
தொகுகிருஷ்ண ஜெயந்தி விழா இக்கோயிலில் பாஞ்சராத்ர ஆகம அடிப்படையில் 11 நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழாவின்போது பல அலங்காரங்களில் கண்ணனைக் காணலாம். 7ஆம் நாள் உறியடித்திருவிழாவும் 11ஆம் நாள் விடையாற்றியும் நடைபெறும். [1]
நவநீத சேவை
தொகுநவநீத சேவையின்போது தஞ்சாவூரிலுள்ள நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாண வெங்கடேசப்பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன் கோயில், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமபெருமாள், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசபெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதபெருமாள், படித்துறை வெங்கடேசபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் கலந்துகொள்கின்றனர். [2] அந்த கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.
குடமுழுக்கு
தொகுஇக்கோயிலின் குடமுழுக்கு 2 சூலை 2018இல் நடைபெற்றது. [3]
பிற கோயில்கள்
தொகுதஞ்சாவூரில் நவநீத கிருஷ்ணன் கோயிலும், பூலோக கிருஷ்ணன் கோயிலும், விட்டோபா கோயிலும், கண்ணனுக்காக உள்ள பிற கோயில்களாகும். இவற்றில் நவநீத கிருஷ்ணன் கோயிலும், விட்டோபா கோயிலும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோயில்களாகும். [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 கரந்தை ஸ்ரீயாதவ கண்ணன் (ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி 23.8.2019), தினமணி, 23 ஆகஸ்டு 2019
- ↑ தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை, மாலை மலர், 30 மே 2016[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ யாதவ கண்ணன் கோயில் கும்பாபிஷேகம், தினமலர், 2 சூலை 2018
- ↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997