தஞ்சாவூர் களிமேடு அப்பர் மட தேர் விபத்து

தஞ்சாவூர் களிமேடு அப்பர் மட தேர் விபத்து என்பது 26 ஏப்ரல் 2022 இல் நிகழ்ந்த விபத்தாகும்.[1][2] தமிழக வரலாற்றில் நிகழ்ந்த பெரிய தேர் விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

நிகழ்விடம்

தொகு

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு என்ற கிராமத்தில் அப்பர் மடம் உள்ளது. இம்மடம் நூற்றியம்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதாகும். இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா கொண்டாடப்படுகிறது

விபத்து

தொகு

ஏப்ரல் 2022 இல் தொன்னூற்று நான்காவது அப்பர் விழாவில் அலங்கரிக்கப்பட்ட அப்பரின் ஐம்பொன் சிலை தேரில் வைத்து புறப்பாடு நிகழ்ந்துள்ளது. [2] கீழத்தெரு வழியாக பிரதான சாலைக்குச் செல்ல திரும்பியபோது, தேர் நிலைகுலைந்து‌ உயரழுத்த மின்கம்பி மீது உரசியதால் தேரில் மின்சாரம் தாக்கி, தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த விபத்தால் மூன்று சிறுவர்கள் உட்பட பதினொரு நபர்கள் உயிரிழந்தனர். பதினேழு பேர் படுகாயமடைந்தனர்.[1]

நிவாரணம்

தொகு

இந்த விபத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது. [1]

தமிழக அரசு சார்பில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின், களிமேடு கிராமத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கினார். [1]

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "தஞ்சாவூரில் தேர் விபத்து நிகழ்ந்தது எப்படி?". இந்து தமிழ் திசை.
  2. 2.0 2.1 அர்ச்சுணன்,ம.அரவிந்த், கே குணசீலன்,சி. "தஞ்சாவூர் களிமேடு தேர்த் திருவிழா விபத்து: 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி - நடந்தது எப்படி?". https://www.vikatan.com/. {{cite web}}: External link in |website= (help)CS1 maint: multiple names: authors list (link)