தஞ்சாவூர் தளிகேசுவரர் கோயில்
தஞ்சாவூர் தளிகேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இந்தக் கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூருக்கு அருகே வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் தளிகேசுவரர் ஆவார். இறைவி சுகுந்த குந்தலாம்பிகை என்றழைக்கப்படுகிறார்.
அமைப்பு
தொகுகோயிலின் முன்பு குளம் உள்ளது. குளம் அதிக நாட்களாக பராமரிப்பின்றி உள்ளது. அதற்கடுத்தபடியாக ராஜகோபுரம் காணப்படுகிறது. மூலவர் சன்னதியின் இடது புறம் இறைவி சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு முன்பாக நந்தி, பலிபீடமும், அடுத்து இரு புறமும் துவாரபாலகர்களும் காணப்படுகின்றனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக வலப்புறம் விநாயகர் உள்ளார். திருச்சுற்றில் இரு விநாயகர்கள், லிங்கத்திருமேனி, கஜேசுவரி, பாணங்கள், நாகர்கள் காணப்படுகின்றனர். அருகே சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது. தேவகோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியும் துர்க்கையும் உள்ளனர். மூலவர் விமானத்தில் ஆனையுரித்தேவர், பைரவர், தட்சிணாமூர்த்தி, காளி, மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் சுதை வடிவில் காணப்படுகின்றனர். கோயிலின் வலப்புறம் காணப்படுகின்ற மற்றொரு வாயிலில் கோபுரம் உள்ளது. இந்த வாயிலையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.
குடமுழுக்கு
தொகுகுடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் தற்போது (ஜனவரி 2017)நடைபெற்று வருகின்றன.