தஞ்சாவூர் பள்ளியக்கிரகாரம் கோதண்டராமர் கோயில்

தஞ்சாவூர் பள்ளியக்கிரகாரம் கோதண்டராமர் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் பள்ளியக்கிரகாரத்தில் அமைந்துள்ளது.

கோயில்

அமைப்பு

தொகு
 
விமானம்

இக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. முன் மண்டபத்தின் வலது புறம் அனுமாரும், இடது புறத்தில் விநாயகரும் உள்ளனர். அதற்கு முன்பாக மூலவரை நோக்கிய நிலையில் கருடாழ்வார் உள்ளார். அதற்கு முன்பாக பலி பீடம் உள்ளது. கருவறை கோஷ்டத்தில் துர்க்கையம்மன் உள்ளார்.

மூலவர்

தொகு

கருவறையில் கோதண்டராமர் நின்ற நிலையில் உள்ளார்.

குடமுழுக்கு

தொகு

9 சூன் 1995 (யுவ ஆண்டு வைகாசி மாதம் 26ஆம் நாள்) வெள்ளிக்கிழமை மற்றும் 20 சூன் 2005 (பார்த்திப ஆண்டு ஆனி மாதம் 6ஆம் நாள்) திங்கள் கிழமை ஆகிய நாள்களில் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுகள் உள்ளன.

நவநீத சேவை

தொகு

நவநீத சேவையின்போதுதஞ்சாவூரிலுள்ள நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாண வெங்கடேசப்பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவகண்ணன், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமபெருமாள், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசபெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதபெருமாள், படித்துறை வெங்கடேசபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் கலந்துகொள்கின்றனர். [1] அந்த கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

தொகு