தஞ்சாவூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
தஞ்சாவூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இந்தக் கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 3 கிமீ தொலைவில் கருந்தட்டாங்குடியில் அமைந்துள்ளது.
தஞ்சாவூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் | |
---|---|
மூலவர் கருவறை விமானம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சை மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சுந்தரேஸ்வரர் |
தேவஸ்தான கோயில்
தொகுதஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் சுந்தரேஸ்வரர். இறைவி மீனாட்சி.
அமைப்பு
தொகுமூலவர் சன்னதியின் முன்புறம் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் முன்பாக கொடி மரம், பலிபீடம், நந்தி. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் இடப்புறம் மீனாட்சியம்மன் சன்னதி. அம்மன் சன்னதியின் கருவறை கோஷ்டத்தில் குபேரன் உள்ளார். திருச்சுற்றில் விநாயகர் முன்பாக மூஞ்சுறு, மகாலிங்கம், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சண்முகர், அய்யப்பன், ஆஞ்சநேயர், தண்டாயுதபாணி முன்பாக மயில், சரஸ்வதி, கஜலட்சுமி, நால்வர், நவக்கிரகம், சனீஸ்வர, பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர்.
குடமுழுக்கு
தொகுஇக்கோயி 30.4.1990 மற்றும் 31.8.2007 ஆகிய நாள்களில் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டுகள் உள்ளன.