தஞ்சாவூர் வைத்தியநாதேஸ்வரர் கோயில்
தஞ்சாவூர் வைத்தியநாதேஸ்வரர் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் உள்ள பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் அமைந்துள்ளது. இக்கோயில் பூமால் ராவுத்தர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. [கு 1]
வைத்தியநாதேஸ்வரர் கோயில் | |
---|---|
கோயில் வளாகம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சை மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வைத்தியநாதேஸ்வரர், வைத்தியநாதர் |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | புராதனக் கோவில் |
மூலவர்
தொகுஇக்கோயிலின் மூலவராக வைத்தியநாதேஸ்வரர் லிங்கத்திருமேனியாக உள்ளார். இங்குள்ள இறைவி பாலாம்பிகை ஆவார்.
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் இரு மண்டபங்கள் உள்ளன. இக்கோயில் இரு வாயில்களைக் கொண்டு அமைந்துள்ளது. ஒரு வாயில் மூல்வர் கருவறையை நோக்கியும், மற்றொன்று இறைவி சன்னதியை நோக்கியும் செல்லும் வகையில் அமைந்துள்ளது. உள் மண்டபத்தில் சூரியன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோர் உள்ளனர். அடுத்து கருவறையில் மூலவருக்கு முன்பாக பலிபீடமும் நந்தியும் உள்ளன. கருவறை முகப்பில் வலது புறம் விநாயகரும், இடது புறம் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரும் உள்ளனர். கருவறை முகப்பிற்கு மேலாக சிவன் பார்வதியுடன் காளையின் மீது அமர்ந்த கோலத்தில் உள்ளார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக பாலாம்பிகை சன்னதி உள்ளது.
சிறப்பு
தொகுஇக்கோயிலில் யோக பட்டத்தில் அமர்ந்திருக்கும் சிவன் உருவம் உள்ளது. [கு 2] அருகில் கௌமாரி உருவம் உள்ளது. இவ்விரு சிற்பங்களும் மிகப்பழமையான 8-9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.[1]
குடமுழுக்கு
தொகுஇக்கோயிலின் குடமுழுக்கு 8.6.1995இல் நடைபெற்றதற்கான கல்வெட்டு காணப்படுகிறது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[2]