தடய அறிவியல் நிறுவனம், மும்பை

மும்பை தடயவியல் அறிவியல் நிறுவனம் (Institute of Forensic Science, Mumbai) இந்தியாவின் மும்பை நகரத்திலுள்ள மேடம் காமா சாலையில் அமைந்துள்ள உயர்கல்விக்கான ஒரு நிறுவனம் ஆகும். மகாராட்டிர மாநில அரசின் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வித் துறை இந்நிறுவனத்தை 2009 ஆம் ஆண்டு நிறுவியது. மும்பை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இத்தடயவியல் அறிவியல் நிறுவனம் தடய அறிவியலில் இளம் அறிவியல் பட்டப் படிப்பும், தடய அறிவியல் முதுநிலை இரண்டு ஆண்டுகள் படிப்பையும் வழங்குகிறது. இரண்டாண்டு படிப்பில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் ஆய்வு ரீதியான நிபுணத்துவம் பெறுகின்றனர். தடய அறிவியல் மற்றும் சட்டம் தொடர்பான முதுகலை பட்டயப் படிப்பும், எண்ணிம மற்றும் இணைய தடயவியல் மற்றும் தொடர்புடைய சட்டம் தொடர்பான முதுநிலைக்குப் பிந்தைய பட்டயப்படிப்பும் இங்கு வழங்கப்படுகிறது.[1] ஐ.எஃப்.எஸ்.சி மும்பை, அறிவியல் நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்துள்ளது. நகரத்தின் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றான மும்பை அறிவியல் கழக வளாகத்தில் நிறுவனம் அமைந்துள்ளது. மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நிறுவனத்திற்கு அங்கீகாரமும் வழங்கியுள்ளது.

தடய அறிவியல் நிறுவனம், மும்பை
Institute of Forensic Science, Mumbai
குறிக்கோளுரைநீதிக்கான அறிவியல் அறிவு (Scientific Knowledge for Justice)
உருவாக்கம்2009 (2009)
பணிப்பாளர்முனைவர் பிரதிமா ஜாதவ்
கல்வி பணியாளர்
15
பட்ட மாணவர்கள்150
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்40
அமைவிடம்
மும்பை
சேர்ப்புமும்பை பல்கலைக்கழகம்
இணையதளம்instforensicscimumbai.in

நோக்கம்

தொகு

தடய அறிவியல் என்பது இந்தியாவில் வளர்ந்து வரும் ஒரு துறையாகும். தொழில்நுட்பத்தின் பற்றாக்குறை காரணமாக இன்னும் முழுமையடையாமல் உள்ளது. இந்தியாவில் தடயவியல் எதிர்காலத்தைப் பிரகாசமாக்க மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பது இந்நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும்.

துறைகள்

தொகு
  • தடயவியல் அறிவியல்
  • எண்ணிம மற்றும் இணைய குற்றம்
  • தடயவியல் வேதியியல்
  • உளவியல் தடயவியல்
  • தடயவியல் உயிரியல்
  • தடயவியல் இயற்பியல்
  • சட்டம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Institute of Forensic Science, Mumbai: Courses, Fees, Placements, Ranking, Admission 2021". www.shiksha.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.

வெளி இணைப்புகள்

தொகு