தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோயில்

கருநாடகம் மாநிலத்தின் பெங்களூரு நகர மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோயில் என்பது இந்தியாவில் கருநாடகம் மாநிலத்தின் பெங்களூருவுக்கு அருகில் மல்லேசுவரம் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். நானூறு ஆண்டுகளுக்கு பழைமையான, பூமியில் புதையுண்ட இக்கோயில் 1997ஆம் ஆண்டு மீட்கப்பட்டது. இக்கோயிலின் மூலவர் சிவலிங்கத்தின் மேல் தளத்தில் நந்தி வீற்றிருக்கிறார். விநாயகர் சன்னதி மற்றும் நவக்கிரக சன்னதி ஆகியவை இக்கோயிலிலுள்ள இதர சன்னதிகளாகும்.[1]

தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோயில்
தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோயில், மல்லேசுவரம், பெங்களூரு, கருநாடகம்
தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோயில் is located in Bengaluru
தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோயில்
தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோயில்
தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோயில், மல்லேசுவரம், பெங்களூரு, கருநாடகம்
ஆள்கூறுகள்:13°00′16″N 77°34′20″E / 13.0044°N 77.5722°E / 13.0044; 77.5722
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கருநாடகம்
மாவட்டம்:பெங்களூரு நகர மாவட்டம்
அமைவிடம்:மல்லேசுவரம்
சட்டமன்றத் தொகுதி:மல்லேசுவரம்
மக்களவைத் தொகுதி:பெங்களூரு வடக்கு
ஏற்றம்:934.19 m (3,065 அடி)
கோயில் தகவல்
மூலவர்:சிவலிங்கம்
குளம்:உண்டு
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று
வரலாறு
கட்டிய நாள்:நானூறு ஆண்டுகள் பழமை; 1997ஆம் வருடம் புதுப்பிக்கப்பட்டது

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 934.19 மீ. உயரத்தில், (13°00′16″N 77°34′20″E / 13.0044°N 77.5722°E / 13.0044; 77.5722) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, மல்லேசுவரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

 
 
தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோயில்
தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோயில் (Bengaluru)

சிறப்பு

தொகு

இக்கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ள நந்தியின் வாயிலிருந்து தொடர்ச்சியாக விழும் தீர்த்தமானது, அதன் கீழ்ப்பகுதியில் வீற்றிருக்கும் சிவலிங்கம் மீது விழுந்து சிவலிங்கத்தை அபிசேகம் செய்வது போல் தோற்றமளிக்கிறது. பின்னர் இந்த அபிசேக தீர்த்தம் பக்கத்திலுள்ள தெப்பக்குளத்தில் சென்று சேருகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி ஆலயம்". today news in tamil (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-04-17. பார்க்கப்பட்ட நாள் 2024-10-27.
  2. தினத்தந்தி (2018-01-10). "சிவனை நீராட்டும் நந்தி வாய் தீர்த்தம்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-27.