தட்டக்கல் பாறை ஓவியங்கள்
தட்டக்கல் பாறை ஓவியங்கள் என்பன, கிருட்டிணகிரி மாவட்டத்தின் போச்சம்பள்ளியச் சேர்ந்த நாகரசம்பள்ளிக்கு அண்மையில் உள்ள தட்டக்கல் என்னும் இடத்தில் உள்ள பாறையொன்றில் காணப்படும் பழங்கால ஓவியங்கள் ஆகும்.[1] இப்பகுதியில் பல பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய புதைகுழிகள் காணப்படுகின்றன. [2]
ஓவியங்கள்
தொகுஇவ்வோவியங்களில் பல்வேறு செயற்பாடுகளைச் செய்யும் மனித உருவங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள ஒரு ஓவியத்தில் மனித உருவங்கள் நின்ற, அமர்ந்த, கிடந்த நிலைகளில் வரையப்பட்டுள்ளன. இவை வெண்ணிறத்தில் வரையப்பட்டுள்ளன.[3]
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.
- துரைசாமி, ப., மதிவாணன், இரா., தருமபுரி பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துக்கள், சேகர் பதிப்பகம், சென்னை, 2010.
- Dayalan, D., Rock Art in Tamilnadu and its Archaeological Perspective.