தட்டைப்புழு இனம்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி தட்டைப் புழு கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
பிளாட்டிஹெல்மின்தஸ் அல்லது தட்டைப்புழு இனத்தில் உலகில் உள்ள தட்டைப்புழுக்கள் ஒரே இனமாக உள்ளன. இவற்றில் உடல் தட்டையாக இருப்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. இத்தொகுதியில் உள்ள புழுக்களுக்கு சீலோம் எனும் உடற்குழி இல்லை. உணவுப்பாதை பலவற்றில் இருப்பதில்லை. கழிவு நீக்கமும் ஊடுகலப்பு ஒழுங்குபாடும் ' சுடர் செல்' களால் நடைபெறும். இவ்வகைப் புழுக்கள் பெரும்பாலும் இருபாலின. ஒரே புழுவில் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருக்கும். இவை பொதுவாக ஒட்டுண்ணிப் புழுக்கள் இத்தொகுதியில் மூன்று வகுப்புகள் உண்டு.
வகுப்பு 1 டர்பெல்லேரியா
தொகுஇவை மென்கயிற்றுப் புழுக்கள் என அழைக்கப்படுகின்றன. இவை தனித்து நீரில் வாழும் தட்டைப்புழுக்கள். பெரும்பாலும் சுய வாழ்விகளாகவும், ஒரு சில ஒட்டுண்ணிகளாகவும் உள்ளன. இவ்வகுப்பில் உள்ள பிளனேரியா அபரிமிதமான மீள்தோன்றல் தன்மையுடையது[1] {{cite book}}
: Empty citation (help)
வகுப்பு 1 டிரமட்டோடா
தொகுஇவை ஒட்டுண்ணிப் புழுக்கள் இவற்றின் மேல்புறத்தில் கியூட்டிக்கிள் எனும் பாதுகாப்பு உறை உண்டு. விருந்தோம்பியின் உடலினுள் ஒட்டிக்கொள்ள இவை ஒட்டுறுப்புகளாக கொண்டுள்ளன.( உதாரணம்) ஃபாசியோலா அல்லது ஈரல் புழு.
வகுப்பு 3 செஸ்டோடா
தொகுநாடாப்புழுக்கள் இவ்வகுப்பைச் சார்ந்தவை. இவை அக ஒட்டுண்ணிகள். இவற்றின் வாழ்க்கை சற்று சிக்கலானது. இப்புழுக்களின் வாழ்வில் இரண்டு ஒட்டுண்ணிகள் உண்டு. இவற்றின் உடலமைப்பு முழுவதும் ஒட்டுண்ணி வாழ்விற்கு உரியது. உணவுக்குழல், வாய் போன்றவை இல்லை. உடல் சுவரின் வழியாக உணவை உறிஞ்சக் கூடியவை. தலைப்பகுதி ஸ்கோலக்ஸ் எனப்படும். இப்பகுதியில் வளைய வடிவ கொக்கிகள் உண்டு. ஒட்டுறுப்புகளும் உண்டு.
மேற்கோள்
தொகு- ↑ கு வரதநாசன் (1988). தட்டைப்புழுக்கள். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம். p. 384.
உசாத்துணை
தொகுதமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் விலங்கியல் மேல்நிலை முதலாம் ஆண்டு பக்கம் 14,15