தண்டியா கிளர்ச்சி

தண்டியா கிளர்ச்சி (Dundiya rebellion) என்பது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போர்புகனின் களத்தில் (பிளவுபடாத காமரூபப் பகுதி) அகோம் பேரரசிற்கு எதிரான எழுச்சியாகும். கிளர்ச்சிக்கு ஹரதுட்டா புஜார்பருவா தலைமை தாங்கினார்.[1] திருப்பித் தாக்கப்படுவதற்கு முன்பாகவே, இவர் கூலிப்படை துருப்புக்களுடன், வடக்கு காமரூபத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தார். அசாமின் மேல்பகுதியில் மொமோரியா கிளர்ச்சி நடந்து கொண்டிருந்ததைப் போலவே இந்த கிளர்ச்சியும் நடந்தது. ஆனால் அகோம் அரசவாதிகள் 1792இல் கேப்டன் வெல்ஷால் மீட்டெடுக்கப்பட்டனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Baruah, S. L. (1993). Last Days of Ahom Monarchy. Munshiram Manoharlal Publishers Pvt Ltd, New Delhi.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டியா_கிளர்ச்சி&oldid=3173271" இலிருந்து மீள்விக்கப்பட்டது