தத்தாத்ராய ஸ்ரீதர் ஜோஷி
தத்தாத்ராய ஸ்ரீதர் ஜோஷி (Dattatraya Shridhar Joshi)(பிறப்பு: அக்டோபர் 11, 1908, இறந்த தேதி தெரியவில்லை) என்பவர் 1933ஆம் ஆண்டின் இந்தியக் குடிமைப் பணி அதிகாரி ஆவார். இவர் 9வது இந்திய அமைச்சரவை செயலாளராக 27 ஜூன் 1966 முதல் திசம்பர் 31 1968 வரை பணியாற்றினார்.[1] ஜோஷி தேசஸ்த் ரிக்வேதி பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்.
1969ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவரால் இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூசண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cabinet Secretaries Since 1950". Cabinet Secretary, Government of India portal. Archived from the original on 2010-03-10. பார்க்கப்பட்ட நாள் 2014-03-05.
- ↑ "Padma Awards Directory (1954–2013)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.