தத்தா நாயக்
இந்திய இசை அமைப்பாளர்கள்
தத்தா நாயக் (Datta Naik) (12 டிசம்பர் 1927– 30 டிசம்பர் 1987), என். தத்தா என்றும் அழைக்கப்படும் இவர், பாலிவுட் திரைப்படங்களில் பணிபுரியும் இசையமைப்பாளர் ஆவார்.
தத்தாராம் பாபுராவ் நாயக் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | என். தத்தா |
பிறப்பு | கோவா, போர்த்துகேய இந்தியா | 12 திசம்பர் 1927
இறப்பு | 30 திசம்பர் 1987 மும்பை, இந்தியா | (அகவை 60)
இசை வடிவங்கள் | திரை இசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | ஆர்மோனியம் |
இசைத்துறையில் | 1955–1987 |
இளமை வாழ்க்கை
தொகுபோர்த்துகேய இந்தியாவின் கோவாவில் பிறந்த நாயக், புகழ்பெற்ற இசை இயக்குநர் எஸ். டி. பர்மனின் உதவியாளராக பஹார், சாசா, ஏக் நாசர் (1951), ஜல் (1952), ஜீவன் ஜோதி (1953) மற்றும் அங்காரே (1954) போன்ற படங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பாடலாசிரியர் சாகிர் லுதியான்வி சேர்ந்து இசையமைத்த இவரது பாடல்கள் வெற்றிகரமாகவும் இருந்தது. தத்தா நாயக் 1987 டிசம்பர் 30 அன்று இறந்தார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Biopic on music composer Datta Naik in the works". The Indian Express (in ஆங்கிலம்). 2020-12-31. பார்க்கப்பட்ட நாள் 2023-09-26.