எஸ். டி. பர்மன்

எசு. டி. பர்மன் அல்லது சச்சின் தேவ் பர்மன் (1 அக்டோபர் 1906 - 31 அக்டோபர் 1975) ஒரு இந்திய இசை இயக்குநரும் பாடகரும் ஆவார்.[1] ரசிகர்களால் "தாதா" என அன்புடன் அழைக்கப்பட்ட சச்சின் தேவ் பர்மன், திரிபுரா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் இவரது தந்தை அரியணையில் இருந்து விலக்கப்பட்டார்.[2][3] 1937-இல் வங்காளத் திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கி மிகவும் வெற்றிகரமான மற்றும் செல்வாக்கு மிக்க இந்திய திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவரானார். இவர், இந்தியிலும் வங்காளத்திலும் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.[4] [2][5][6] இவரது மகன் ராகுல் தேவ் பர்மன், பாலிவுட் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராகவும் இருந்தார்.[2][3]

சச்சின் தேவ் பர்மன் S. D. Burman
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்শচীন দেববর্মণ
பிறப்பு(1906-10-01)1 அக்டோபர் 1906
கோமிலா, வங்காளதேசம், பிரித்தானிய இந்தியா
இறப்பு31 அக்டோபர் 1975(1975-10-31) (அகவை 69)
மும்பை, மகாராட்டிரம்,  இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடகர்
இசைத்துறையில்1933–1975

பல்துறை இசையமைப்பாளராக இருந்ததோடு மட்டுமல்லாமல், கிழக்கு வங்காள நாட்டுப்புற பாணியிலும், லேசான அரை-பாரம்பரியத்திலும் பாடல்களைப் பாடினார்.

லதா மங்கேஷ்கர், முகமது ரபி, கிஷோர் குமார், ஆஷா போஸ்லே, கீதா தத் போன்ற பாடகர்கள் பர்மனின் இசை அமைப்பில் பாடியுள்ளார்கள். எசு. டி. பர்மன், 14 இந்தி திரைப்படங்களிலும் 13 வங்காள மொழித் திரைப்படங்களிலும் பாடல்கள் தாமே பாடியுள்ளார்.[7][8]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

அக்டோபர் 1, 1906 அன்று, அன்றைய பிரித்தானிய இந்தியாவின் வங்காளத்தில் (தற்போது வங்காளதேசம்), கொமிலா என்னும் இடத்தில் பர்மன் பிறந்தார். எஸ். டி. பர்மனின் தந்தையார், திரிபுராவின் அரச குடும்பத்தைச் சார்ந்த நபாட்விப்சந்திர தேவ் பர்மன் மற்றும் தாயார் மணிப்பூர் மன்னர் குடும்பத்தைச் சார்ந்த நிருபமாதேவி ஆவார். அவர்களின் 9 குழந்தைகளில் 5 ஆண்பிள்ளைகளுள் கடைசியாகப் பிறந்தவர் சச்சின் தேவ் பர்மன் ஆவார். இவரது இரண்டாவது அகவையில் தாயார் காலமானார்.

கல்வி

தொகு

எஸ். டி. பர்மன், கோமில்லா விக்டோரியா கல்லூரியில் இளங்கலைபட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டத்தையும் முடித்துள்ளார்.[9]. அதோடு, 1925 முதல் 1930 ஆம் ஆண்டு வரை இசைக்கலைஞர் கே.சி டேவிடம் முறையான இசைப்பயிற்சி பெற்றார். அதன் பின்னர் 1932 ஆம் ஆண்டு, பீசமதேவ் சட்டோபதயா என்பவரின் அறிவுறுத்தலின்படி கைஃபா பாதால் கான் (சாரங்கி கலைஞர்), அகர்தலாவில் உள்ள உசுதாத் அல்லாவுதீன் கான், உசுதாத் பாதல் கான் ஆகியோரின் கீழும் பயிற்சிகள் மேற்கொண்டார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

தொகு

தேசிய திரைப்பட விருதுகள்

தொகு

பிலிம்பேர் விருதுகள்

தொகு
  • 1954: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: டாக்சி டிரைவர்
  • 1973: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: அபிமான்
  •  1959: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: சுஜாதா: பரிந்துரை
  • 1965: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: கைடு: பரிந்துரை
  •  1969: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: ஆராதனா: பரிந்துரை
  •  1969: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: தலாஷ்: பரிந்துரை
  •  1974: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: பிரேம் நகர்: பரிந்துரை

மறைவு

தொகு

1975ஆம் வருடம் அக்டோபர் 31 ஆம் நாள், இந்தியாவின் மகாராட்டிர மாநிலம், மும்பையில் தனது 69 வது அகவையில் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. দেববর্মণ, শচীন (2011). সরগমের নিখাদ (Sorgomer Nikhad) (1st ed.). Prothoma Prokashan. p. 80. ISBN 978-984-8765-73-9.
  2. 2.0 2.1 2.2 "S. D. Burman - Music Director - Profile and filmography". Cinemaazi.com website. Archived from the original on 2 October 2023. Retrieved 2 April 2024.
  3. 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; TheHindu என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Cultural Correspondent. "Sachin Dev Burman: Epitomising the East Bengali lilt". thedailystar.net. The Daily Star. Retrieved 29 May 2015. {{cite web}}: |last1= has generic name (help)
  5. "Sachin Dev Burman: Epitomising the East Bengali lilt". The Daily Star. 30 October 2009. http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=111978. 
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; rediff2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. "Remembering SD Burman: 10 lesser-known facts about Sachin Dev Burman". India Today. 1 October 2016. https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/sd-burman-344268-2016-10-01. 
  8. Ashish Dutta (28 July 2006). "'Wahan Kaun Hai Tera' - S. D. Burman' music". The Hindu newspaper இம் மூலத்தில் இருந்து 22 June 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080622171622/http://www.hinduonnet.com:80/thehindu/fr/2006/07/28/stories/2006072801380100.htm. 
  9. Tripura Genealogy at Queensland Univ|இணையம் காணல்: சனவரி 16 2016

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._டி._பர்மன்&oldid=4282883" இலிருந்து மீள்விக்கப்பட்டது