தத்தா பகத்

இந்திய எழுத்தாளர்

தத்தா கணபத் பகத் (DattaGanpatBhagat) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நாடக ஆசிரியராவார். நந்தேடு மாவட்டத்தின் வாகி கிராமத்தில் 1945 ஆம் ஆண்டு சூன் மாதம் 13 ஆம் தேதி இவர் பிறந்தார். அம்பேத்காரின் சிந்தனைகளில் ஈர்ப்பு கொண்ட பகத் மராத்தி மொழி தலித் நாடக இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இயங்கினார். மராத்தி மொழி பேராசிரியராக அவுரங்காபாத்திலுள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். [1] பகத் எழுதிய நாடகம் அவார்ட் (வேர்ல்பூல்) புனித நகரமான பண்டரிபுரம் யாத்திரைக்கு எதிரான தலித் அடக்குமுறையை பிரதிபலித்தது. நாடகத்தில் மகாராட்டிராவின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளான திண்டி மற்றும் தமாசாவைப் பயன்படுத்தியதற்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. [2]

தத்தா பகத்

இவரது மற்றொரு நாடகமான வாடா பால்வாடா (வழிகள் மற்றும் தப்பித்தல்கள்) நன்கு அறியப்பட்ட ஒரு நாடகமாகும். அமெரிக்க நாடக இயக்குநர் எரின் பி மீ தொகுத்த சமகால இந்திய நாடகங்கள் என்ற தொகுப்பில் இந்நாடகம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்நாடகம் 'மராத்தி நாடக இலக்கியத்தில் ஒரு மைல்கல்' என்றும் கருதப்படுகிறது. [3]பகத் தனது இலக்கிய விமர்சனங்களுக்காகவும் குறிப்பாக தலித் உணர்வும் மராத்தி மொழி தலித் நாடகங்கள் தொடர்பான விமர்சனங்களுக்காவும் நன்கு அறியப்படுகிறார்.

மேற்கோள்கள்தொகு

  1. https://www.forwardpress.in/2017/08/dalit-rangmanch-aur-ambedkar/
  2. Joya John (September 2008). "Plays of DattaBhagat". Muse India (21). Archived from the original on 2010-01-04. https://web.archive.org/web/20100104135355/http://museindia.com/showfocus10.asp?id=1030. 
  3. Gabrielle H Cody and Evert Sprinchorn (2007). The Columbia Encyclopedia of Modern Drama. 2. New York: Columbia University Press. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்தா_பகத்&oldid=3151608" இருந்து மீள்விக்கப்பட்டது